வராது வந்த நாயகன்

 

கடவுளின் அருளால் “வராது வந்த நாயகன்” எனும் புத்தம்புது நாவலை என்னுடைய பதினைந்தாவது நாவலாக கிண்டிலில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியலில் நிலவும் இன்றைய அலட்சியப்போக்கை மாற்றி அமைக்க நாம் வாழும் சமூகத்தில் இருந்து ஒரு சிறந்த அரசியல் தலைவன்(நோ… இவன் தொண்டன் தான் ஆனாலும் தலைவன் தான்) உருவானால் எப்படியிருக்கும் என்கிற எனது அடுத்த கற்பனை.

ஒரு வருடத்திற்கு முன்பே எழுதலாம் என ஆரம்பித்து, அப்பொழுது பள்ளி குழந்தைகளின் பொது தேர்வு குறித்து பெரும் விவாதம் கிளம்பவும், இந்தக் கருவை சற்று தள்ளி வைத்து முதலில் “ஒரு விதை உயிர் கொண்டது” நாவலை எழுதி முடித்து அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

புதிய நாவலுக்கு வருவோம், ஒரு முக்கிய பிரச்சினையை கருவாக எடுத்து முடிந்தவரை கவனமாகவும், சுவாரசியமாகவும் தீர்வை சொல்லும் விதமாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறேன்.

எடுத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை என் முதல் கதை ‘மன்னிக்க வேண்டுகிறேன்’னில் லேசாக கோடிட்டு, ஒன்பதாவது நாவலான ‘என்னை தெரியுமா’வில் சில அடிகளை பதித்து, ‘பூஜைக்கேற்ற பூவிது’வில் ஒரு பக்கத்தை காண்பித்த நான், இதில் வேறுவிதமாக களம் இறங்கி இருக்கிறேன்.

வழக்கம் போல் குடும்ப நாவல் பிரியர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்ற விரும்பாமல் அழகான காதலும், புரிதலும் கருவின் ஊடே வருவதுப் போல் கலந்துக் கொடுத்திருக்கிறேன். அதேபோல் என் கதைகளில் நான் முக்கியமாக பின்பற்றும் நாயகன், நாயகியின் பெயரையும் நீங்கள் ரசிக்கும் வண்ணம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.

இனி எல்லாம் ரகசியம் தான், கதையில் தெரிந்துக் கொள்ளுங்கள். நான் ரொம்பவே ரசித்து வடிவமைத்த விஷயங்களை நீங்களும் ரசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு இதோ உங்களுக்கான இணைப்பை பகிர்கிறேன்.

Story was published as Ebook in Amazon Kindle.

For Amazon Link Click Here

 

2 thoughts on “Varathu Vantha Nayagan – Deepababu”

  1. Nice updates sis,pengalu ethirana vanmurai patri sollirukking,athukku mirna thane website open panni pengali thunpurasairavan gal theriyapatturamatheri sethirukkurathu varavergapadevendiathu nalla kathi kalam mega arumai 👍👍👍👍👍👌👌👌👌👌💕💕💕💕💕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *