Mamanaar – Deepababu

Published on :

👳மாமனார்👳   முகத்தில் எரிச்சல் மிகுந்திருக்க தன்னை முறைக்கும் கணவனை எப்படி சமாளிப்பது என புரியாமல் பரிதவிப்புடன் நோக்கினாள் ஜோதி. “உன் அப்பா தன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? சொந்த பேரனுடைய ஸ்கூல் அட்மிஷனுக்கு கொடுத்த லட்ச ரூபாய் பணத்திற்கு கூட கணக்காக மாதாமாதம் வட்டி கடைக்காரன் போல வட்டிப்பணம் வாங்குகிறார்!” “ஐயோ… அது அப்படி இல்லைப்பா, அப்பா அவருடைய ரிட்டயர்ட்மென்ட் பணத்தை பாங்கில் டெபாசிட் பண்ணி […]

Selvi. Thirumathees 5 {Final} – Sivapriya

Published on :

திருமதீஸ்: உ    அந்த புத்தம் புதிய நிசப்தமான காலை வேளையில் மனதை வருடும் மெல்லிய தென்றலில் வீட்டின் தோட்ட புல்வெளியில் வீட்டின் சுவரோரம் போடப்பட்டிருந்த நாற்காலியில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்த மகனைத் தேடி வந்திருந்தார் ஈஸ்வரின் தாய், “டேய் இன்னும் சக்தியை சமாதானம் செய்யலையா… முகம் இன்னும் வாட்டமாவே இருக்கு…”    “ப்ச்… நீ விடுமா நான் பாத்துக்குறேன்.” அன்னையின் கேள்விக்கு தலையை நிமிர்த்தாமலே பதில் கூறினான் ஈஸ்வர்.   […]

Selvi. Thirumathees 4 – Sivapriya

Published on :

திருமதீஸ்: ஈ    “இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க சக்தி?” தன் செவிகளில் திடுமென விழுந்த ஒலியில் ஒரு கணம் பதறி பின் நிமிர்ந்தாள் சக்தி. அங்கு பாகற்காயை மென்ற கணக்காய் நின்றிருந்தான் ஈஸ்வர். தோளில் மடிக்கணினி பை தொங்க, கழுத்தில் டை மற்றும் சட்டையில் இரு பொத்தான்கள் அவிழ்த்து விடப்பட்டு ஓய்ந்த நிலையில் இருப்பவனை கண்டதும் கையும், காலும் பரபரவென அவனுக்கு தேவையானதை செய்யத் துடித்தாலும் மனம் […]

Selvi. Thirumathees 3 – Sivapriya

Published on :

திருமதி: இ   மற்ற இரு வீடுகளுக்கு முற்றிலும் மாறாக அவ்வீடு மெளனத்தின் ஆட்சியால் சூழப்பட்டிருக்க, செங்கதிரோன் தன் புலன்களை விரிவாய் விரித்து தாராளமாய் அவ்வீட்டின் மீது வீசினும், அதனுள் இருந்த உறுப்பினர்கள் அதனை சற்றும் சட்டை செய்யாது நித்திராதேவியின் ஆசியில் திளைத்திருந்தனர். இருப்பினும் எவ்வளவு நேரம் தான் தன் அருளை ஒரே வீட்டிற்கு வாரி வழுங்குவார் தேவி? ஆசி வழங்கிய சோர்வில் துயில் கொள்ள சென்றுவிட, அந்த வீட்டின் […]

Selvi. Thirumathees 2 – Sivapriya

Published on :

திருமதி: ஆ   ஆதவன் செவ்வென தன் வேலையை எவர் தூண்டலமின்றி செய்ய அவருக்கு உறுதுணையாய் தன் வேலையையும் வீறிட்ட குரலால் செய்தான் கிருஷ். ஆதவனின் கதிர்கள் திரைச்சீலையுடன் கண்ணாம்பூச்சு ஆட அந்த பட்டும்படாத வெளிச்சத்தில் தனக்கருகில் அழுது கொண்டிருந்த க்ருஷை தன் புறம் இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள் மங்கை. அன்னையின் சூட்டை உணர்ந்த க்ரிஷ் அவள் மார்பில் முட்டி மோதி தன் பசி தீர்க்க முயல, பட்டென விழிகளை […]

Selvi. Thirumathees 1 – Sivapriya

Published on :

திருமதி: அ   நாலாபுறமும் அடைக்கப்பட்டிருக்கும் அந்த நிசப்த அறையை இருள் சூழ்ந்திருக்க, பெயருக்கென்று இரவு விளக்கும் எரிந்துகொண்டிருக்க, அந்த நிசப்தத்தை கலைக்கவென அலறியது அந்த ஒலிக்கடிகை. வழக்கமான ஒன்றாயினும் முதல்முறை போலவே பதறியடித்து ஒலிக்கடிகையின் தலையில் ஒரு தட்டு தட்டி அமர்த்தினாள்.   கண் இமைகள் பிரியாமல் அடம்பிடிக்க, மனமோ இன்னும் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் உறங்கிக்கொள்கிறேனே என்று அவகாசம் கேட்டது. மூளையும் அலுப்பில் தன் கடினத்தை […]

Yenge Yenathu Kavithai – Deepababu

Published on :

எங்கே எனது கவிதை   கல்லூரியில் முதலாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருந்த ஹாசினிக்கு வாழ்க்கை வண்ணமயமாகத் தோன்றியது. பள்ளிப்பருவம் முடிந்து ஆரம்பித்த இந்த வாழ்க்கை சிறகடித்துப் பறப்பது போல் அவளை உணரச் செய்தது. இனி யாரும் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறாய்… இந்த வருடம் பாஸாகி விடுவாயா போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டு தொல்லை பண்ண மாட்டார்கள். ‘ஷ்… அப்பா… இந்த ப்ளஸ்-டூ முடிப்பதற்குள் தான் எத்தனை தொல்லை? படி […]