Mamanaar – Deepababu

Published on :

👳மாமனார்👳   முகத்தில் எரிச்சல் மிகுந்திருக்க தன்னை முறைக்கும் கணவனை எப்படி சமாளிப்பது என புரியாமல் பரிதவிப்புடன் நோக்கினாள் ஜோதி. “உன் அப்பா தன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? சொந்த பேரனுடைய ஸ்கூல் அட்மிஷனுக்கு கொடுத்த லட்ச ரூபாய் பணத்திற்கு கூட கணக்காக மாதாமாதம் வட்டி கடைக்காரன் போல வட்டிப்பணம் வாங்குகிறார்!” “ஐயோ… அது அப்படி இல்லைப்பா, அப்பா அவருடைய ரிட்டயர்ட்மென்ட் பணத்தை பாங்கில் டெபாசிட் பண்ணி […]

Nitharsanam – Deepababu

Published on :

நிதர்சனம்   “ஹாய்…! என்ன இவ்வளவு நேரம்?” என்று புன்னகையுடன் கதவைத் திறந்தாள் இனியா. “ஹாய்!” என்றபடி அமைதியாக உள்ளே வந்தான் நவிலன். “ஏன்பா ரொம்ப டல்லா இருக்கீங்க… வேலை அதிகமா?” என்றாள் அவன் கன்னம் தடவி. “அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நார்மலா தான் இருக்கேன்!” என்று தளர்வாய் சோபாவில் அமர்ந்தான். “இந்தாங்க டீ…” என்று கப்பை அவனிடம் நீட்டியவாறே அவனருகில் அமர்ந்தாள். ஏதோ யோசித்தபடி, எதுவும் பேசாமல் டீயை […]

Chennai Book Fair 41 – [ Jan 10 – Jan 22 ]

Published on :

  ஹாய் பிரெண்ட்ஸ்! நமது தலைநகர் சென்னையில் 41 வது புத்தக கண்காட்சி திருவிழா கடந்த 10 ஆம் தேதி ஆரம்பமாகி உள்ளது. அங்கே நான்கு ஸ்டால்களில் என்னுடைய நாவல் கிடைக்கும் என்பதை உங்களுடன் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.😀 😀 😀 விருப்பம் உள்ளவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்டால்களில் வாங்கி கொள்ளலாம். மேலும் என் எழுத்துநடை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யலாம். 😉 😉 😉 உங்கள் அன்பு சகோதரி,  தீபா பாபு    பிரியா […]

Yenge Yenathu Kavithai – Deepababu

Published on :

எங்கே எனது கவிதை   கல்லூரியில் முதலாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருந்த ஹாசினிக்கு வாழ்க்கை வண்ணமயமாகத் தோன்றியது. பள்ளிப்பருவம் முடிந்து ஆரம்பித்த இந்த வாழ்க்கை சிறகடித்துப் பறப்பது போல் அவளை உணரச் செய்தது. இனி யாரும் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறாய்… இந்த வருடம் பாஸாகி விடுவாயா போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டு தொல்லை பண்ண மாட்டார்கள். ‘ஷ்… அப்பா… இந்த ப்ளஸ்-டூ முடிப்பதற்குள் தான் எத்தனை தொல்லை? படி […]

100 words story – Deepababu

Published on :

காற்றாய் வருவேன் டிவியில் லயித்திருந்த தேவாவை போன் சத்தமிட்டு கலைத்தது. மாலினி ஒரு கால்கேர்ள், பணத்திற்காக அவன் இஷ்டத்திற்கு ஆடும் பொம்மை. தேவா அவள் வீட்டிலிருந்தான். “தேவா… எனக்கு பயமாக இருக்கு. நான்கு நாட்களாக வீட்டில் என்னென்னமோ நடக்குது… கரன்ட் இருந்தாலும் லைட், பேன் போட்டால் ஆன் ஆக மாட்டேங்குது. ஜன்னல், கதவு எல்லாம் சினிமாவில் வருகிற மாதிரி தானாகவே பட்பட்டென்று அடித்துக் கொள்கிறது!” என்றாள் மிரட்சியோடு. “ஏய்… அறிவில்லை. […]

Kannal Pesum Penne – Deepababu

Published on :

கண்ணால் பேசும் பெண்ணே  “அதிகாலை நிலவே… அலங்காரச் சிலையே… புதுராகம் நான் பாடவா… இசைத்தேவன் இசையில்… புதுப்பாடல் துவங்கு… எனையாளும் கவியே… உயிரே… அதிகாலை கதிரே… அலங்காரச் சுடரே… புதுராகம் நீ பாடவா…” “ஹலோ… ப்ளூ சுடிதார்! உன்னைத்தான், ஹேய்…” என்று கைத்தட்டி யாரோ உரக்க அழைக்கும் சத்தம் கேட்டது. மெய்மறந்து ஜானகியின் குரலில் லயித்திருந்தவளை அந்த குரல் கலைத்தது. அலுவலகம் முடிந்து ஒரு காதில் இயர்போனை மாட்டிக் கொண்டும், […]

10 words stories – Deepababu

Published on :

    எங்கேயோ இருந்த என்னை என் காதலனோடு இணைத்தவன் வேறுயாரும் இல்லை என் வாகனம்!!! ****************************** சற்றுமுன் என் குழந்தைகள் சண்டையிட காரணமாக இருந்த பொம்மை கேட்பாரற்று கிடக்கிறது தரையில்!!!

Kanne Kalaimaane – Deepababu

Published on :

கண்ணே கலைமானே   பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்? தன் பிள்ளை மனதால் படிப்பவரின் மனதை கொள்ளை கொண்டு விடும் நாயகியால் நாயகனின் மனதை கவர்ந்திழுப்பதா கடினம்? வாசகர்களின் மனதில் பேபிம்மாவாகவும், மாமாவாகவும் ஆழமாக நங்கூரம் பதித்தார்கள் நம் இளாக்கள். காதலிலும், நகைச்சுவையிலும் இது ஒரு பாணியில் வெளிவந்த கதை.   Story was removed […]

Unarvu Porattam – Deepababu

Published on :

உணர்வு போராட்டம்    “அம்மா!” என்று ஆவலுடன் அழைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள் ஹரிணி. கிளாஸ் பெயின்டிங் முடித்து பினிஷிங் டெகரேஷன் செய்துக் கொண்டிருந்த ராஜஸ்ரீ அவளின் குரல் கேட்டு நிமிர்ந்தார். “வாடா… ஏன் இவ்வளவு நேரம்? வெளியில் சென்றால் நேரத்திற்கு வீடு வர வேண்டும் என்ற எண்ணமே உனக்கு மறந்து விடுமே!” என்றார் கேலியாக. “ப்ச்… இல்லைம்மா. சுபிக்ஷா வீட்டில் ஒரு முக்கியமான டிஸ்கஷன் போய்க் கொண்டிருந்தது அதனால் தான் […]