Poojaiketra Poovithu Epilogue – Deepababu

Published on :

Epilogue   கருணின் வரவை எதிர்பார்த்து இனிமையாக அலைபாய்ந்தபடி தனக்கான மருத்துவமனை பிரிவில் ஆவலுடன் காத்திருந்தாள் அருந்ததி. விழிகள் அவ்வப்பொழுது அலைபேசியிடம் பாய்ந்துப் பாய்ந்து மீண்டுக் கொண்டிருந்தது. மதிய உணவு வேளையில் இவளை தொடர்பு கொண்டு, மாலை தான் வந்து அழைத்துக் கொள்வதாக கூறியிருந்தான் அவன். சட்டென்று திரை ஒளிரவும் பாய்ந்து அதை எடுத்து ஸ்வைப் செய்தவள், “ஹலோ!” என்றாள் மெதுவாக. “பப்ளி… ரெடியா? நான் வாசலில் தான் இருக்கிறேன்!” […]

Poojaiketra Poovithu 48 – Deepababu

Published on :

*48*   “அத்தையாக இருக்கும்!” என்றபடி கைபேசியை எடுத்த கருண் சிந்துவிடமிருந்து அழைப்பு வரவும், “அட… அம்மா!” என்று வியந்தபடி ஸ்வைப் செய்து காதில் வைத்தான். “ம்மா…” என்று உற்சாகமாக அழைத்தவனுக்கு தெரியாதா? கமலாவின் மூலம் தன் வீட்டிற்கு தகவல் சென்றிருக்கும் என்பது. “கண்ணா… நீ அத்தைக்கு விவரம் சொல்லி, அவர்கள் எங்களை அழைத்துப் பேசி, நாங்கள் பெரியவர்கள் அங்கே ரிச்சர்ட் வீட்டிற்கு வரலாம் என முடிவெடுத்து… அதை அவனுக்கும் […]

Poojaiketra Poovithu 42 – Deepababu

Published on :

*42*   “ஹேய்… எதற்காக உனக்கு இவ்வளவு கோபம் வருகிறது? நான் எதையுமே வேண்டுமென்றே கேட்கவில்லை, உன்னுடைய திட்டத்தை தெரிந்துக் கொள்ளலாம் என்று தான் விவரம் கேட்கிறேன். திருமணத்தை தள்ளிப் போடுவதால் நீ எப்படி லாபமடைவாய் என்று யோசித்ததன் விளைவு தான் அந்த கேள்வி!” என ரிச்சர்ட் விளக்கவும் சற்றே அமைதியானாள் அட்சயா. “லாபம் எப்படியா? முதல் விஷயம் திருமணம் தள்ளிப் போகும்…” தனக்குள் ஊற்றெடுக்கும் நகையை அடக்கியபடி, “ம்… […]

Poojaiketra Poovithu 34 – Deepababu

Published on :

*34*   “கருணின் மேலும், உங்கள் குடும்பத்தினரின் மேலும் அருந்ததிக்கு இருந்த ஆர்வம் அவள் பேச்சிலும், விழிகளிலுமே வெளிப்பட்டு விட்டது. எனக்கு அது வியப்பை தந்தாலும் உங்கள் அனைவரை பற்றியும் முதலில் நான் தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவளிடம் எதையும் மேற்கொண்டு விசாரிக்காமல் அவள் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டேன்!” என்ற ரிச்சர்டை பார்த்து சின்ன தலையசைப்புடன் புன்னகைத்தாள் சிந்துஜா. “மறுநாள் காலை அருந்ததியை அழைத்து வரவென்று விடுதிக்கு […]

Poojaiketra Poovithu 23 – Deepababu

Published on :

*23*   முந்தைய நாளைப் போலவே அருந்ததியிடம் ஒருவித ஆர்வத்தையும், தடுமாற்றத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கருண் அவள் விழிகள் மறந்தும் தன்புறம் திரும்பாததை கண்டு குழம்பினான். தன்னிடம் மட்டுமின்றி அனைவரிடமும் அவள் ஒரு ஒதுக்கத்துடன் பழகுவது வெளிப்படையாகவே தெரியவும், தன் அம்மாவின் வார்த்தைகளை எண்ணி கவலையடைந்தவன் அடுத்து செய்வதறியாது தடுமாறி நிற்க, அவன் நிலைப்புரிந்த தன்யா வேகமாக அவனுடைய உதவிக்கு வந்தாள். “கருண் இங்கே பாருங்கள்… ரிச்சர்டின் பிளேட்டில் ஸ்வீட் […]

Poojaiketra Poovithu 15 – Deepababu

Published on :

*15*   “என்ன அண்ணா பிரச்சினை? எனக்காக எதுவும் வருந்திக் கொண்டு தயங்காதீர்கள், உண்மையை சொல்லுங்கள்!” என்று வற்புறுத்தினாள் அருந்ததி. “ஹும்… என்ன தான் வருத்தம் என்றாலும் எவ்வளவு தான் தயங்கினாலும் உன்னிடம் இதை நான் சொல்லி தான் ஆக வேண்டும்!” என்றான் ரிச்சர்ட் விரக்தியுடன். அவள் குழப்பத்துடன் இமைக்காது அவன் முகத்தையே பார்த்திருக்க, அவனோ சுவற்றை வெறித்த வண்ணம் சில நாட்களாக தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை காரண […]

Poojaiketra Poovithu 9 – Deepababu

Published on :

*9*   தன் கரத்தில் முகம் புதைத்து கதறுபவளை என்ன சொல்லி எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் மலைத்த ரிச்சர்ட், அருந்ததியின் நிலையை உணர்ந்து அவளை சட்டென்று தேற்றும் வழியை தேடி மிகவும் கவலையுடன் சிந்தனைகளை மேற்கொண்டான். “அருந்ததிம்மா!” என்று அவளை மெல்ல எழுப்ப, “என்… என்னை… எங்கே… எங்கேயாவது ஒரு நல்ல பாதுகாப்பான ஆசிரமத்தில் உங்களால் சேர்த்து விட முடியுமா? ப்ளீஸ்…” என நிமிர மறுத்து தொடரும் கேவல்களுக்கிடையே […]

Poojaiketra Poovithu 1 – Deepababu

Published on :

*1*   மாநகரின் முக்கிய மையப்பகுதி, இதயம் என்று கூட சொல்லலாம். அத்தகைய பகுதியில் அமைந்துள்ள அகன்று விரிந்த சாலையில் அந்த நகரின் கால்வாசி பகுதியை தனக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு கம்பீரமாக அரண்மனை போன்றதொரு தோற்றத்தில் எழுந்திருந்தது அந்த பங்களா. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்களின் மூலம் நேர்மையான முறையில் வர்த்தகத்தை நடத்தி வெற்றி கண்டது தான் அக்குடும்பம். தங்கள் குடும்ப தொழிலின் வெற்றிகரமான சாம்ராஜ்யத்தில் […]

Poojaiketra Poovithu – Deepababu

Published on :

பூஜைக்கேற்ற பூவிது   பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும்.  ஆனால்… உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் அவல நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்களின் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன்.  ஆங்… […]

Azhage Azhage Yethuvum Azhage 32 – Deepababu

Published on :

*32*   தன்னருகில் யோசனையோடு படுத்திருந்தவளின் தோளில் தன் தாடையை வைத்து அழுத்தியவன், “என்ன யோசனை?” என்றான். “நான் செய்யப் போவது சரி தானே மாமா?” என திடுமென்று சந்தேகமாக வினவினாள் அவந்திகா. “அதில் என்னடா தங்கம் சந்தேகம் உனக்கு? நீ செய்ய விரும்புவது மிகவும் நல்ல செயல் தான்!” என்று அவள் விரல்களை வருடி உதட்டில் பதித்தான் சியாம். “ஆனால்… இது குறித்து நிறைய ஆர்டிக்கிள்ஸ், கதைகள், படம் […]