Athu Mattum Ragasiyam 3 – Sankari Dayalan

Published on :

*3*   அவன் சாளரத்தை நோக்கிச் சென்றான். அங்கே கிழிந்த ஆடைகளும் பல வருடங்களாக சவரத்திற்கு பழக்கப்பட்டிருக்காத நீண்ட தாடியுடனும் பார்ப்பதற்கு பைத்தியக்காரத் தோற்றத்திலிருந்த ஒருவன் இவனுடைய சாளரத்தையே வெறித்து நோக்கியவாறு “ வந்துட்டியா… நீ வந்துட்டியா… காலம் உன்னை கூட்டிட்டு வந்துடுச்சா…. உனக்காகதான் நான் காத்துகிட்டு இருந்தேன் … பிறவியின் நோக்கத்தை நிறைவேற்ற வந்துட்டியா “ என்றவாறு உளறிக்கொண்டிருநதான் . விஷ்ணு ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாலும் இதையெல்லாம் கூறியவன் […]

Athu Mattum Ragasiyam 2 – Sankari Dayalan

Published on :

*2*   சூரியன் உச்சியினை தொட்ட வேளை அனைவரும் குளித்து முடித்து தயாராகி டைனிங் டேபிளுக்கு வந்து சேர்ந்தனர்.கௌரி அனைவரும் சாப்பிட வாழை இலையை விரித்துக் கொண்டிருந்தார். சைவ சமையலில் உள்ள அத்தனை உணவுகளும் அந்த டேபிளை அடைத்துக் கொண்டிருந்தன. ராமின் தாய் கௌரி முதலில் ஒரு கிண்ணத்தில் பால் பணியாரம் வைத்தார்.பின்பு ஒரு முழு நேந்திரம் வாழைப்பழத்தை வைத்தார். அவ்வாழையிலையின் பச்சை நிறத்திற்கும் நேந்திரம் வாழைப்பழத்தின் பூரணமஞ்சள் நிறத்திற்கும் […]

Athu Mattum Ragasiyam 1 – Sankari Dayalan

Published on :

*1*   அந்த உயர் ரக வெளிநாட்டு இறக்குமதி கார் புழுதியை பறக்க விட்டுக்கொண்டு ஜல்லிக்கட்டு காளையைப் போல சீறிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. காரின் உள்ளே சென்ற வாரம் வெளியான புதிய ஆங்கில படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மகிழுந்தின் உள்ளே மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.அவர்களின் தோற்றத்திலேயே அவர்கள் நவ நாகரிக இளைஞர்கள் என்பது தெரிந்தது. “டேய் மச்சி…….. நம்ம ராம் சொன்னபோது கூட நான் நம்பிக்கை இல்லாமதான்டா இருந்தேன் ஆனா […]

Yennai Theriyuma 40 – Deepababu

Published on :

*40*   “ஆகாஷ்… இங்கே என்னை பார்!” என்று அவன் முகத்தை தன் இரு கைகளாலும் நேராக தாங்கி சில நொடிகள் விழிகளை ஊடுருவிய ஜெய்சங்கர், “உனக்கு நான் எதுவும் தனியாக விளக்கவே தேவையில்லாமல் இத்தனை விஷயங்களையும் நீ புத்திசாலித்தனமாக தானாகவே தெரிந்து வைத்திருக்கிறாயே… இன்னும் நான் சொல்லப் போகும் மீதி விஷயத்தையும் கொஞ்சம் பொறுமையாக கேட்க வேண்டும் என்ன?” என்றான். “என்ன… இங்கிருந்து நான் போய் தான் ஆக […]

Yennai Theriyuma 33 – Deepababu

Published on :

*33*   இரு கைகளையும் உயரே தூக்கி லேசாக சோம்பல் முறித்தபடி திரும்பிய ஜெய், மணியின் ஆராயும் பார்வையில் சட்டென்று கைகளை கீழே போட்டான். “என்ன பார்வை? சீக்கிரம் போய் டிபன் எடுத்து வை போ!” என்று மிடுக்குடன் அவளை அதிகாரம் செய்தான். ‘பாருடா அதிகாரத்தை…’ என உள்ளுக்குள் வியந்தவள், “இட்லி ஊற்றி வைத்து விட்டு தான் அத்தை மிக்ஸியில் சட்னி அரைக்கிறார்களாக இருக்கும்!” என்றாள் அமைதியாக. அவளின் பார்வையை […]

Yennai Theriyuma 27 – Deepababu

Published on :

*27*   அன்று மாலை ஹிரணியுடைய குழந்தையை பார்க்கவென்று ஜெய்யின் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனை சென்றிருந்தனர். அங்கே தாய், சேய் இருவரின் நலம் விசாரித்து, அகிலுடன் சற்று நேரம் கேலிப் பேசி கலகலத்து விட்டு அதே மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர். “அச்சோ… அந்த க்யூட் குட்டி எவ்வளவு அழகு இல்லை, தொட கூட தேவையில்லை பக்கத்தில் விரலை கொண்டு போனாலே சிவக்க ஆரம்பித்து விடுகிறது. அப்பா… என்ன சாப்ட் […]

Yennai Theriyuma 18 – Deepababu

Published on :

*18*   “தள்ளி விடாமல்… பின்னே கட்டி…” என்று பொரிய ஆரம்பித்த மணி, தன் வார்த்தைகளின் பொருள் உணர்ந்து சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள். அதைக் கண்டு மீண்டும் துள்ளலுடன் அவளிடம் நெருங்கிய ஜெய் நூலளவு இடைவெளியில் நின்று, “ம்… கட்டி…?” என்று எடுத்துக் கொடுத்தான். அவனை தீப்பார்வை பார்த்தவள், “இந்த வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்!” என்று எகிறினாள். “வேறு யாரிடம்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறாய்?” என்று […]

Yennai Theriyuma 10 – Deepababu

Published on :

*10*   குழந்தையை தன் முதுகில் உப்பு மூட்டையை போல் தூக்கி கை, கால்களை வளைக்க சொல்லி பிடித்துக் கொள்ள செய்தவன் வேகமாக சைக்கிளை உருட்டி பைக் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். நேரம் நள்ளிரவு ஒரு மணி, வரும் வழியெல்லாம் தான் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டுக் கொண்ட ஜெய்சங்கர் கோபியை அழைத்து சில ஏற்பாடுகளை செய்ய சொல்லி அறிவுறுத்தி விட்டு நேராக அவன் வீட்டிற்கு சென்றான். வாசலில் […]

Yennai Theriyuma 1 – Deepababu

Published on :

*1*   அந்த வெள்ளை நிற சான்ட்ரோ கார் ஊருக்கு ஒதுக்குபுறமாய் இருந்த பங்களாவிற்குள் நுழைய அதை பின் தொடர்ந்து வந்த ஜெய்சங்கர் அருகே இருந்த பெரிய மரத்தின் பின்னே மறைவாக தன் பைக்கை நிறுத்தி விட்டு அங்கே நடமாடுகின்ற ஆட்களை நோட்டமிட ஆரம்பித்தான். காரிலிருந்து இறங்கிய அந்த பிரபலமான தொழிலதிபர் வீட்டினுள் செல்ல அவருடன் இரண்டு நபர்கள் மட்டும் உள்ளே சென்றனர். வெளியே நல்ல திடகாத்திரமாக இருந்த இருவர் […]

Yennai Theriyuma – Deepababu

Published on :

என்னை தெரியுமா   த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ… நோ… எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவேண்டும் என நம் வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் விரிவாக எழுதப்பட்டது. த்ரில்லர் கதை என்றதும் என் நினைவுகளில் முதலில் வந்தவர் கறுப்பு வெள்ளை படத்தில் என்னுடைய பேவரைட் ஹீரோ தி கிரேட் […]