Oru Vithai Uyir Kondathu 40(2) – Deepababu

Published on :

*40(2)*   “நீங்கள் சொல்வது ரொம்ப சரி… குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். அப்புறம் நீங்கள் பின்பற்றும் பாடத்திட்டங்கள் பற்றி இன்னும் எதுவும் சொல்லவில்லையே… அதைப் பற்றியும் சொல்லுங்கள்!” “ம்… நான் ஏற்கனவே கூறியது போல் அரசினர் பள்ளியில் படித்து வெளிவந்த டாக்டர்.அப்துல் கலாம், ஹச்.சி.எல் நிறுவனர் திரு.ஷிவ் நாடார், இஸ்ரோ தலைவர் டாக்டர்.சிவன் போன்றோர் அந்த அடிப்படை படிப்பறிவை வைத்து தானே […]

Oru Vithai Uyir Kondathu 31 – Deepababu

Published on :

*31*   தன்னெதிரே பரிதாபமாக அமர்ந்திருக்கும் சிறுவனை பார்த்து நிறைமதிக்கு பாவமாக தான் இருந்ததே தவிர கோபம் எதுவும் வரவில்லை. அவனிடம் அமைதியாக அவள் தன் இருக் கரங்களை நீட்டவும் பளிச்சென்று முகம் மலர்ந்தவன் வேகமாக வந்து தன் தாயின் மடியில் அமர்ந்துக் கொண்டான். மகனை தன்னோடு சேர்த்து அணைத்து உச்சி முகர்ந்தவள் அவன் முகத்தை நிமிர்த்தி இரு கன்னங்களிலும் அழுந்த முத்தமிட சந்தோசமாக அவளின் இடையை கட்டிக்கொண்டான் நிகித். […]

Oru Vithai Uyir Kondathu 19 – Deepababu

Published on :

*19*   முன்தினம் கணவன் தன்னிடம் இதே தண்டனையை கையாண்ட பொழுது வெகுவாக அழுது தீர்த்தவள் இன்று அவனுக்கு இசைவாக எவ்வித எதிர்ப்புமின்றி அமைதியாக ஒத்துழைத்தாள். மனைவியின் செயலில் வியந்த மன்வந்த் மெதுவாக விலகி அவள் முகம் பார்க்க, விழிகளை இறுக்க மூடியிருந்தவளிடம் இருந்து வெளியேறும் சுவாசக்காற்று சிறு புயலுக்கு ஒத்ததாக அவள் நெஞ்சம் லேசாக ஏறி இறங்க சீறலாக வந்துக் கொண்டிருந்தது. நிர்மலமான நிலவிற்கு ஈடான அமைதியை சுமந்திருந்த […]

Oru Vithai Uyir Kondathu 9 – Deepababu

Published on :

*9*   நிறைமதியின் கனல் வீசும் விழிகளை பார்த்த மன்வந்த், ‘ அடேய் பாவி… ஏன்டா கொழுந்து விட்டு எரிகின்ற அக்னியில் மேலும் எண்ணை கொப்புரையை கொட்டுகிறாய்?’ என்று முகேஷை வரைமுறை இன்றி மனதினில் வார்த்தைகளால் வறுத்தெடுத்தான். நம் மதியின் அண்ணனோ அதற்கும் மேல் அவளின் வயிற்றெரிச்சலை அமோகமாக கிளப்பிக் கொண்டிருந்தான். “ஹேய்… இப்பொழுது தான் உங்கள் இருவரையும் நான் சரியாக பார்க்கிறேன்!” என விழிகளை உருட்டிவிட்டு, “அம்மா… இங்கே […]

Oru Vithai Uyir Kondathu 1 – Deepababu

Published on :

*1*   காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பத்து மைல் தொலைவில் சென்னை செல்லும் மார்க்கத்தில் நகரின் ஆரவாரமும், போக்குவரத்தும் அடங்கும் இடத்தின் அருகாமையில் உள்ள முக்கிய பிரதான சாலையில் அமைந்திருந்தது அக்குடியிருப்பு பகுதி. லக்சோரியஸ் எனப்படும் ஆடம்பரமான டியுப்லெக்ஸ் அமைப்பை கொண்ட இருபது வில்லாக்கள் அடங்கியிருந்த இடத்தை சுற்றிலும் சுற்றுசுவர் எழுப்பப்பட்டு நுழைவுவாயிலின் அருகே ஒருபுறம் அழகிய சிறுவர் பூங்காவும் எதிர்ப்புறமாக பாதுகாவலரின் குடிலும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு […]

Oru Vithai Uyir Kondathu – Deepababu

Published on :

ஒரு விதை உயிர் கொண்டது   இன்று உள்ள கல்வி கொள்கைகளால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் குறித்து அலசி என் அறிவுக்கு எட்டிய ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறேன். கதையின் கரு பின்பகுதியில் தான் வரும், அதற்கு முன் நம் நாவல் பிரியர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க மன்வந்த், நிறைமதியின் காதலையும், மோதலையும் சுமந்து செல்லும் கதை. Story was removed only sample chapters available.  

Unai Kaappen Uyiraga 23 – Deepababu

Published on :

*23*   “ஏன்பா பிரவீண் நான் உங்களுடன் கண்டிப்பாக இங்கே தங்கியாக வேண்டுமா என்ன? நான் நன்றாக தான் இருக்கிறேன், என்னால் அங்கே ஊரில் தனியாக சமாளித்துக் கொள்ள முடியும். சாரதா கிளம்பும் பொழுது நானும் கிளம்புகிறேன்!” என பேரனிடம் தயங்கி தயங்கி மொழிந்தார் பொன்னம்மா. இரத்த உறவுகளே தன்னை ஒதுக்கி விட்ட நிலையில் தான் செய்துவிட்ட சின்ன உதவிக்காக இந்தப் பையன் ஏன் தன் பாரத்தை சுமக்க வேண்டும் […]

Unai Kaappen Uyiraga 18 – Deepababu

Published on :

*18*   பிரவீண் குடியிருந்த வீடு, தளத்திற்கு இரண்டு வீடுகள் விகிதமாக மூன்று அடுக்கு மாடிகளை கொண்டு மொத்தமாக ஆறு வீடுகளை கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பை போன்ற அமைப்பை ஒத்திருந்தது. மொத்தக் கட்டிடத்தின் உரிமையாளர் ஒருவரே, தான் கீழ் தளத்தின் ஒரு வீட்டில் குடியிருந்துக் கொண்டு மற்ற ஐந்து வீடுகளையும் வாடகைக்கு விட்டிருந்தார். பிரவீணை பார்த்ததும் ஆறு மாதங்களாக வீட்டிற்கே வரவில்லை, வாடகையும் கொடுக்கவில்லை என காச்மூச்சென்று சத்தம் […]

Unai Kaappen Uyiraga 14 – Deepababu

Published on :

*14*   சட்டென்று பிரணவிகாவின் செல்களில் வார்த்தைகளில் விவரிக்க இயலாத பரபரப்பு தொற்றிக்கொள்ள தொண்டை அடைத்து வார்த்தைகள் வரமறுத்து வேகமாக சஞ்சயின் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள் அவள். அவளின் உணர்வுகளை படித்துவிட்ட அத்தை மகனும் அவளிடம் ஆதரவாக இமைகளை அழுந்த மூடித் திறந்துவிட்டு தன்னெதிரே நிற்பவனிடம் திரும்பி அழகாக முறுவலித்தான். இருவரின் மௌன பாஷையை கண்டு அவன் புருவங்களை மேலேற்றவும், இதற்கும் மேல் எப்படி உயர்த்துவது என்று உன்னை […]

Unai Kaappen Uyiraga 8 – Deepababu

Published on :

*8*   பெருநகரத்தில் நரம்பியல் துறையில் நன்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர் ஒருவரிடம் சஞ்சய்யை அழைத்துச் சென்றனர் சிதம்பரமும், சாரதாவும். உடன் நானும் வருவேன், என் புருஷனுடைய உடல்நிலை எனக்கு ரொம்பவும் முக்கியம் என்று அலட்டியபடி அடம்பிடித்த அண்ணன் மகளின் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு கொட்டி விட்டே தங்களுடன் அழைத்துக் கொண்டார் சாரதா. தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரியும் வாசுவிற்கு அன்று முக்கியமான ஆடிட்டிங் இருந்ததால் அவர் […]