Thachanin Thirumagal : 15 Sivapriya

Published on :

*15*     “குந்தவை டிபன் எடுத்து வச்சிட்டேன்… சீக்கிரம் வாடி… நேரமாகிட்டு இருக்கு…” என்று வானதி வெளியிலிருந்தே சத்தமாய் தங்கையை அழைக்க, குந்தவை அறையினுள்ளே தச்சனிடம் போராடிக் கொண்டிருந்தாள். கல்லூரி இறுதித்தேர்வு முடியும் தருவாயில் இருக்க, அடுத்த தேர்வுக்கான விடுப்பும் மூன்று நாட்களுக்கு மேலிருந்தது. அதனால் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தில் இன்று பரீட்சை முடிந்ததும் தோழிகளுக்குள் சிறிய பார்ட்டி. குந்தவை அதை முடித்துக்கொண்டு, காப்பீடு, தந்தையின் சம்பளம் மற்றும் […]

Thachanin Thirumagal : 14 Sivapriya

Published on :

*14*   “எப்போதும் எனக்கு மட்டும் தான் பிரியாணின்னு நினைச்சேன்… ஆனா நீ என்னடி கையில அரிவாள் இல்லாத ஐயனார் மாதிரி இருக்க.” சமாதானம் செய்வதை கூட எப்படி செய்கிறான் பார் என்று மனதில் பட்டென்று எழுந்த எண்ணத்தை துரிதமாய் ஒதுக்கியவள், “நீ என்கிட்ட சொல்லிட்டு வானதியை கூட்டிட்டு வந்திருக்கணும்.” என்று அடுத்ததை துவங்கினாள். சாவுகாசமாய் மெத்தையில் அமர்ந்தவன் அங்கு உறங்கிக் கொண்டிருந்த அறிவழகியின் கன்னத்தை ஒற்றைவிரல் கொண்டு வருடிவிட்டு […]

Thachanin Thirumagal : 13 Sivapriya

Published on :

*13*   உறக்கத்தில் இருந்த அறிவழகியை வாகாய் மெத்தையில் படுக்க வைத்து, தலையணை கொண்டு அணை கட்டிவிட்டு வானதியை கீழே அமரச் சொல்லி தானும் அருகில் அமர்ந்துகொண்டாள் குந்தவை. விவரம் தெரியாமல் குந்தவை குழப்பத்துடன் தவிக்க, வானதியிடம் எந்த பதட்டமும் இல்லை.  “என்னாச்சு? என்கிட்ட கூட சொல்லாம அம்மா எப்படி உன்னை அனுப்புனாங்க? நீயும் அப்படியே கிளம்பி வந்திருக்க?” இறுக்கம் ஏறிய குரலில் குந்தவை அதிருப்தியை வெளிப்படுத்த வானதி முகத்தை […]

Thachanin Thirumagal : 12 Sivapriya

Published on :

*12*     தன்னருகில் அமைதியாய் கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் மருமகளைப் பார்த்தவர் விழியை கூர்மையாக்கி கேள்வியாய் என்னவென்று பார்வையாலே வேண்ட, குந்தவை ஒருநொடி தயங்கிப் பின், “என் மேல உங்களுக்கு வருத்தம் இருக்குமுன்னு புரியுது… ஒரே வீட்டில் இருந்துகிட்டு உங்களை நெருங்க நான் தயங்குறதும், என்னை பார்த்து நீங்க ஒதுங்கிப் போறதும் சரியாப்படல. நாம இப்படி இருக்குறதால நம்ம வீடு வீடாவே இருக்காதோன்னு தோணுது. அப்பாவோட ஈமைச் […]

Thachanin Thirumagal : 11 Sivapriya

Published on :

*11*   “உனக்கு அங்க எல்லாம் பொருந்திப் போகுதாடி? உன்கிட்ட முன்னாடியே கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதற்குள் என்னென்னவோ நடந்துப் போச்சு…”  “இப்போவாவது கேட்கணும்னு தோணுச்சே…” என்று அன்னையிடம் அலட்டிக்கொண்டே கால்களை மடக்கி சுவரில் சாய்ந்தமர்ந்தாள் குந்தவை.  திகட்டத் திகட்ட அவளைக் கொஞ்சிவிட்டு ஒருவழியாய் தச்சன் அப்போது தான் மாலை காபி அருந்திவிட்டு வயலுக்குச் சென்றிருந்தான். மாமியாரும் நீ படி என்று அவளை அனுப்பிவிட, அன்னைக்கு பேசிவிட்டு பின்பு படிப்போம் […]

Thachanin Thirumagal : 10 Sivapriya

Published on :

*10*   “என்னங்கடா நடக்குது இங்க? எவன் வீட்டுக் கூடாரத்தில் எவன் குளிர் காயுறது? எழுந்திருங்க தடிமாடுகளா?” என்று கடுகடுத்தவன் வயல் வரப்பில் அங்குமிங்கும் போதையின் பிடியில் விழுந்துக் கிடந்த அவனின் சகாக்களை காலால் எட்டி உதைத்தான்.  புலர்ந்து கதிர்களை வீசத் துவங்கிய ஆதவனின் வெக்கையைக் கூட பொருட்படுத்தாமல் மதுபோதையின் பிடியில் கீழே அலங்கோலமாய் கிடந்தவர்கள் தச்சனின் அதட்டலுக்கு சிறு அசைவைக் கூட காட்டவில்லை. “எவ்ளோடா குடிச்சி தொலைச்சீங்க… இப்படி […]