ஹாய் சகோஸ்!

எனது தோழி பாலா சுந்தரின் எழுத்துக்கள் பற்றி இங்கே நமது வாசகர்களுக்கு எத்தனை தூரம் அறிமுகம் உள்ளது என்பது சரிவர தெரியாததால் இங்கே அவரை பற்றி ஒரு அறிமுகம் கொடுக்க அவர் ஆசைப்படுகிறார்.

என்றும் அன்புடன்,

தீபா பாபு


வணக்கம்,

என் பெயர் பாலா சுந்தர். நான் எழுத ஆரம்பித்து இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகின்றது. சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கலாம், சிலருக்கு என்னைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். என்னைப் பற்றி தெரியாதவர்களுக்காகத்தான் இந்த சுயவிளக்கம். முதலில் எழுத்தாளர் தீபா பாபு அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் படைப்புகள் பற்றி தனது தளத்தில் பதிவேற்றம் செய்ய ஒத்துக்கொண்டதற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் சொன்னதுபோல பாலா சுந்தர் என்ற பெயரில் தான் நான் கதைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது படைப்புகள் அனைத்தும் என் சொந்த பதிப்பகத்தின் மூலமாக வெளியாகிவிட்டன. கிண்டிலிலும் இருக்கின்றன. வாசகர்களே நான் இதுவரை எட்டு நாவல்களும் ஒரு குறுநாவலும் எழுதியிருக்கேன். அந்தக் கதையின் கிண்டில் விமர்சனங்களையும், முகநூல் விமர்சனங்களையும் தான் இப்போது உங்களுடன் பகிர வந்திருக்கிறேன்.

1) சிற்பமும் அவள் சிற்பியும் அவள்

அமிர்தா ஷேஷாத்ரி அக்காவின் விமர்சனம்.

A REVIEW FOR MY FIRST NOVEL

சிற்பமும் அவளே!! சிற்பியும் அவளே!!- பாலா சுந்தர் Bala Sundar

கவி

அவளை சுற்றி நடக்கும் கதை. தந்தை வெளிநாட்டில் இருக்க, கவிக்கா தாய் ஸ்வேதா இந்தியாவில் இருக்கிறார். காலேஜ் ப்ரொபெஸர். இரண்டும் கெ ட் டான் வயதில் இருக்கும் கவி எதிர் வீட்டு ப்ரேமின் பசப்பு வார்த்தையில் மயங்கி செய்ய கூடாத தவறை செய்கிறாள். ப்ரேமின் தந்தை கண்டு பிடித்து ஸ்வேதாவிடம் சொல்ல அடி பின்னி எடுக்கிறாள் பெண்ணை. கணவரிடம் பேசுவது போல புலம்புகிறாள் பெண்ணை பற்றி. அப்போது உணர்கிறாள் தன் தவறை. அதிலிருந்து மீண்டு தன்னை தானே செதுக்கி கொள்கிறாள்

தவறை உணர்ந்த போது குனிந்து நில்.

தவறை சரிபண்ண நினைத்துவிட்டால் நிமிர்ந்து நில் கவி.’

சுதா

கவிக்கு தோழி என்னும் ரூபத்தில் கிடைத்த மயில் இறகு அவள். இதமாக, சுகமாக வருடிக்கொடுக்கும் மயில் இறகு அவள். வருடும்போது நம்மை ஒரு நொடி தூங்க வைக்கும் மயில் இறகு அவள். அவளின் அப்பா கதை கவிக்கு ஆச்சி மூலமாக தெரிய வர தன்னை சரி செய்யும் ஒரு படிக்களா பார்க்கிறாள்.

தனம் ஆச்சி

ஸ்வேதாவின் அம்மா. சரியான நேரத்தில் சரியான வழிக்காட்டுதல் கவிக்கு. Most positive character .அதுவும் போன தலைமுறை பெண்ணிடம். கவியிடம் அவர் சொல்லும்

நம்மை அன்பால் கட்டிப் போடுபவரை நாமும் அன்பால் கட்டிப் போட்டுவிட வேண்டும்… அந்த கட்டு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? எளிதில் எவரும் அதை அவிழ்க்க முடியாததாக இருக்க வேண்டும். கட்டுண்டவர் நினைத்தால் கூட அதை அவிழ்க்க முடியாததாக இருக்க வேண்டும்.” அருமை

சுதர்ஸன் சார்- மெடிக்கல் காலேஜ் ப்ரொபெசர்.

அவருடன் ஒரு போட்டியில் கவி சொல்லும் வார்த்தைகள் இது. அதில் அவரின் கையெழுத்தில் புக்கை வெல்கிறாள்.

இதில் யார் வெல்லுபவர் என்று எனக்கு எப்போதுமே புரியாது. ஏனெனில் அடுத்த ஆட்டம் ஆடப் போபவர் யார் என்று இரு வீரர்களும் மறந்து விட்ட ஆட்டம் இது. நம் வாழ்வின் இருள் பக்கங்களை மறந்து விட வேண்டும் என்று உணர்த்தும் இந்த செஸ் ஆட்டம்! இருள் பக்கங்களை மறந்துவிட்டால்? அவற்றைக் குப்பையில் போட்டது போல மறந்து விட்டால்? You will never feel low! அடுத்து ஆடுபவர் யார் என்று உங்களுக்கு மறந்துவிட்டால்? ‘checkmate’ என்று கூறி உங்களைத் தோற்கடிக்க உலகில் எவரும் இல்லை தெரியுமா?”

அகில்

கவியை விரும்புகிறான். திருமணம் செய்ய கேட்கும் போது கவி தவிர்க்கிறாள். கடைசி ஒரு கேள்வி அகிலை நோக்கி வீசுகிறாள். அவனிடம் வரும் பதிலில் அசந்து போய் சம்மதம் சொல்கிறாள்.

ஞானத்தால், மனக்கட்டுப்பாட்டால், செதுக்கப்பட்ட கவி என்னும் இன்றைய கம்பீர சிலையை நேசிக்கிறேன்! நீ என்னை நேசிக்கிறாயா?”என்றல்லவா கேட்கிறான்!”

ஒரே ஒரு குறை. கருப்பு புள்ளி. ப்ரேம் தப்பித்து விடுகிறான். ஸ்வேதா பெண்ணை விளாசிய அடிகளை, அவனுக்கும் குடுத்து இருக்கனும். சின்ன பெண்ணை மோசம் செய்தது அவன் தானே. எங்கேயும் பெண்கள் தான் தண்டிக்கபடுகிறார்கள். ஆண் தப்பித்து கொள்கிறான்

மொத்ததில்

கவி தன்னைத்தானே செதுக்கினாள். சிற்பம் அழகாக உருவம் பெற்றது. காதலில், காமத்தில் உருகும் போது, தனது உளியை புத்தியைச் செலுக்க உபயோகப்படுத்தினால்… ​இரண்டிற்கும் வேறுபாடு தெரியும். ​பெண்னே கையில் உளியை எடு! ​வேகமாக இழுத்துச் செல்லும் நாகரீக சூறாவளியில் உன்னைத் தொலைத்து விடாமல் காத்துக்கொள்! ஆக, உங்களுக்குள் உள்ள சிற்பியை உபயோகப்படுத்துங்கள் தோழிகளே! சிற்பமும் அவள் ! சிற்பியும் அவள்!!

2) ஷ்… இது வேடந்தாங்கல்

கிண்டில் விமர்சனம்.

KINDLE REVIEW

karthika

wonderful script

Excellent style of writing. Love cum thriller story/ the suspense heightens a beautiful and very touching climax. satisfying. kudos to the writer.

FACEBOOK REVIEW BY JANSI

“ஷ்! இது வேடந்தாங்கல்!: shh! ithu vedanthangal (Tamil Edition)” by பாலா சுந்தர் Bala sundar. Start reading it for free: http://amzn.in/bsJ85eM

புது விதமான வாசிப்பனுபவத்திற்கு ஏற்ற கதை. ஒரு கௌன்சிலர் …4லி லகரங்கள்… அதன் காரணமாய் நிகழும் எத்தனையோ தொடர் நிகழ்வுகள்.

ராஜன் ஸ்ரீ எனும் இரண்டு பறவைகள்… ஒன்றையொன்று குதறிக் காயப்படுத்த தயங்காத பறவைகள். பழி ஓரிடம் பாவம் ஓரிடம் கதைக்கு தகுந்த பழமொழி இதுவேதான். வெங்கட்…சூப்பர் முடிவு சல்யூட் மேன். வழக்கம் போல பாலா டச்….அதென்ன பாலா டச். பெரிய பெரிய விஷயங்களை (கருதப்படுகின்றவைகளை) ஒன்றுமில்லாதது போல உருவகப்படுத்தி ஓ இவ்வளவுதானா என்பது போல காட்டுவதும்… நாம் உணராத ஒரு கோணத்தில் ஒரு செய்தி சொல்வதும்… நினையாத கோணத்தில் சிந்திக்க வைப்பதுவும் அதுதான் பாலா டச்…

சிறப்பு.

3) காஜலிட்ட விழிகளே

ப்ரதிலிபி விமர்சனம்

என்னால சிரிச்சி முடிக்க முடியல சிஸ்டர். சூப்பர் ஸ்டோரி…

4) டைட்டானிக் கனவுகள்

Facebook reveiw

very nice imaginary script. hats off to the writer…

5) லட்சம் காதலால் காதல் செய்

எழுத்தாளர் திருமதி லாவன்யா அவர்களின் முகநூல் மற்றும் கிண்டில் விமர்சனம்.

(WRITER THIRUMATHI LAVANYA ) LAVANYA SEELAN

Excellent writing and narration. i Loved the way the author handled love in the story. it brings us positive energy and thinking. Thank you for the lovely story.

கிண்டில் விமர்சனம்

SARALA

Awesome writing

wow… this is the first novel i have read. I really liked the way you sethukkufied bala as a hero and heroine. sowmiya vai pathi neenga kadsila sollalainaalum…. readersin karpanaikku vitrreenaga…

Great writing expecting more from you

Aadhira

A book which makes you cry and laugh. no word to say… made me cry,laugh and think. your writing skills are so efficient. truly enjoyed your work. best wishes.

******

Uma thirunavukarasu Review in FB

லட்சம் காதலால் காதல் செய்

ஆசிரியர் பாலா சுந்தர்

கதையை படித்தபின் என்னுள் தோன்றிய உணர்வுகள் ஏராளம் 😊

காதல், வருத்தம், அழுகை (இதுவே சற்று அதிகம்) இறுதியில் புன்னகை என என்னுள் ஏதோ உணர்ச்சி குவியல்கள் வாழ்த்துகள் பாலா 👍

All the best for your future works 💐

லட்சம் காதலால் காதல் செய்🥰🥰🥰காதலால் காதலின் காயம் கரைத்திட்ட காதல் இது 😘🥰🥰😍😍😍😘😘👌👌👌💐💐💐🙋🙋🙋

6) ஆயுத எழுத்தில் காதல்

கிண்டில் விமர்சனம்

wonderful subject

I Enjoyed reading every page. saran, dhana and malli characters are simply superb.

A good read. I enjoyed it. thanks to the author.

(READER) Aakash tony

unique plot.

really good plot. but the length is slightly too much. maybe its in my POV. keep rocking.

REVIEW IN FACEBOOK

ஆயுத எழுத்தில் காதல்.💖💖💖

தலைப்பு பாத்துட்டு ஏதோ முக்கோண லவ் ஸ்டோரி யா இருக்குன்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சன்…வழக்கமாக கதையை ஃபர்ஸ்ட் எப்பில இருந்து ஆரம்பிப்பார்கள்..இல்லன்னா லாஸ்ட் எப்பில இருந்து ஸ்டார்ட் பண்ணுவாங்க சிலர்…இவங்க கதையோட நடுவுல இருந்து ஸ்டார்ட் பணிருந்தாங்க..அதுவே நமக்கு கால்வாசி கதை படிச்சப்பரம் தான் தெரிய வரும்😉😉…சரண் மல்லி இவங்கள சுத்தி தான் நடக்குது இந்த ஆயுத எழுத்து….ஏன் இப்படி ஒரு டைட்டிலை கதைக்கு வச்சிருக்காங்க அப்டின்னு மீ ஒரே தின்கிங் படிக்கும் போது…

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் லாம் இல்ல நம்ம ஹீரோ க்கு….சரியான கேடி பையன் அவன்….ஹீரோயின் ஆ பாக்கிறது பூரா வேற மாறியான பார்வை தான்…திமிரான ஹீரோ…

அவன் திமிர தூள் தூளா ஆக்குற போல ஹீரோயின்….மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டா…உள்ளுக்குள்ள அவன பிடிச்சிருந்தாலும் வெளிய சரண் எனக்கு வேணாம் வேணாம்னு சொல்லிகினே திரியிரா…

எதனால வேணாம்னு சொல்றா? என்ன பண்ணான் அப்படி சரண்?சரண யேத்துகிட்டாலா மல்லி? இந்த ஆயுத எழுத்து கேள்விகளுக்கு விடையாக தான் இருக்கு கதை..

மல்லி என்ன கண்டிஷன சொல்லி கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்றா? அவளோட கண்டிஷன் க்கு சரண் ஒத்துக்கிட்டானா? கன்டிஷன் நிறைவேறியதா? இந்த ஆயுத எழுத்தில் முடியுது கதை…

North Madras பாஷை சோக்கா சொல்லி குத்தாங்க இதுல😝😝…சுருக்கு வலை போட்,இலங்கை கடற்படை அட்டூழியம்,கச்சதீவு இஸ்யூ இதெல்லத்தையும் கொஞ்சம் தொட்டிருக்காங்க..😊😊

பாலா வோட எழுத்து நடை பத்தி சொல்ல தேவையே இல்லை…💗💗💗

அப்புறம் ரொம்ப இன்ஸ்பியர் பண்ண 2 பேர் நவநீதம் அண்ட் தனா…ஹீரோ ஹீரோயின் விட இவங்க தான் ரொம்ப பிடிக்குது….

ரொம்ப பிடிச்சது இந்த கதை Bala Sundar…வாழ்த்துகள்….😍😍😍

7) காதலின் லிட்மஸ் பரீட்சை

கின்டில் விமர்சனம் & முகநூல் விமர்சனம்

Aparna

காதலின் லிட்மஸ் பரீட்சை- பாலா சுந்தர்.

முதலில் வாழ்த்துகள் பாலா💐 உங்க ஒவ்வொரு கதையும் வித்தியாசம், விருவிருப்பு கலந்த அருமையான கதைகள். கண்டிப்பா வாசகர் வைக்கும் லிட்மஸ் பரீட்சையில் நீங்க பாஸ் தான்‌ பாஸ்😄..

அப்படியே என் பள்ளி, கல்லூரி காலங்களுக்கு பயணித்த அனுபவம் கொடுத்தீங்க.. “வாவ் நானும் இன்டர் ஸ்கூல்,காலஜ்ல கலந்துக்கிட்டபோது இப்படித்தான் இருக்கும்ல , ஆமாம்ல எவ்வளவு பயந்தோம், silly fellow, எப்படி பெயர் தெரிஞ்சுது, எப்படி நம்பர் தெரிஞ்சது.. இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் கண்டுபிடிக்க முடியுமோ, who’s this ? என்ற அன்நோன் நம்பருக்கு ரிப்ளை பண்ணியது , பெஸ்டியுடன் பகிர்ந்தது “ என கண்ணுக்கு முன்னால் வந்து போச்சு 😄 கண்டிப்பா அவளுக்கு ஃபோன் பண்ணி பேசனும் இந்த புக் படிச்ச அப்பறம்..

Well handled, இந்த ரெண்டுங்கட்டான் பருவத்த ஹாண்டில் பண்றது மட்டுமில்ல எழுதறதும் கஷ்டம் தான். U Nailed it. ஒவ்வொரு ஸ்டேஜா அவ்வளவு இயல்பா‌ எஃஸ்ப்ளைன் பண்ணியிருகீங்க..

வசனம் எல்லாம் வேற லெவல்..

மதுவோடு அம்மா சொல்லற, “லவ் இஸ் நாட் ராங், ஆனா எப்ப வரணும்னு ஒரு டையம் ஃப்ரேம் இருக்கு.என் ஃப்ரெண்ட் லவன்த்லயே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டா..அடுத்த நாலு வருஷம் என்ன பண்ணபோறோம்னு நினைக்காம, அடுத்த முப்பது வருஷம் என்ன பண்ணுவோம்னு லாங் ஜம்ப் பண்ணிட்டா, அது அவளால முடியல அவளோ பெரிய இடைவெளிய கடக்க.ஸோ ஷீ பெயில்ட் இன் ஹர் லைஃப்..”

விவேக் எனக்கு ஹீரோவ விட‌ இவனத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு, அவன் அடிக்கற டைமிங் வசனம் எல்லாம் வேற லெவல்.. ஆர்யா- விவேக்குள்ள விவாதம் எல்லாம் சூப்பர்.. விவேக் சொல்லற, “லவ் எப்ப வரும் தெரியுமா? ஒருத்தரை பார்த்து பிரமிச்சு போயிடனும். அந்த ஆளு மேல் கண்மூடித்தனமா பிடித்தம் இருக்கணும், விலகவே முடியாதுன்னு தோணனும், சும்மா வெட்டியா அரட்டை அடிக்கணும், அவங்க பேசலைனா கிறுக்கு பிடிக்கணும், ஆக மொத்தம் அவங்க இல்லன்னா நாம் இல்லை…”

ஹரிணி சொல்லற, “தெரிஞ்ச பிசாசுங்களே ஆயிரம் தப்பு பண்ணறப்போ தெரியாத பேய்ய நம்பாத மது..”

மது ஆர்யாட்ட சொல்லற “இதயமும் கண்ணு‌ மட்டும் சைட் அடிச்சா பத்தாது.. மூளையும் சைட் அடிக்கணும்”

அந்த பருவ வயதில் அந்த போனோட லைட் ஃப்ளாஷானாலோ, ரிங் அடிச்சாலோ..படிப்புக்கும், க்யூரியாஸிட்டிக்கும் நடுவுல மாட்டிட்டு முளிக்கறதுன்னு மதுவோட பார்ட் அழகா காட்டியிருக்கீங்க..ஆண் எப்படி யோசிப்பான், பெண் எப்படி யோசிப்பான்னு நல்ல பிரிச்சு சொல்லியிருக்கீங்க..

லாஸ்ட் பட்‌ நாட் லீஸ்ட் லவ் குரு சொல்லற “ஒரு பையன் தன்னை உண்மையாவே லவ் பண்ணறானா?, அவன் நல்லவன் தானான்னு பொண்ணுங்க லிட்மஸ் பேபர் மாதிரி டெஸ்ட் வெச்சு வாழ்க்கையை தேர்ந்து எடுத்தா இரண்டு பேருக்குமே வசந்தம்.” ஜஸ்ட் வாவ்..

இந்த கதை ஆன்லையினில் வரும்போது விவேக் நல்ல ஸ்கோர் பண்ணுவான் 😂. (The main use of litmus is to test whether a solution is acidic or basic. Blue litmus paper turns red under acidic conditions and red litmus paper turns blue under basic or alkaline, Neutral litmus paper is purple)

நல்ல ஒரு கதை , வாழ்த்துகள் Bala Sundar 😄. இன்னும் இன்னும் நிறைய‌ நல்ல கதைகள் தந்து எங்க லிட்மஸ் டெஸ்டில் எப்பவுமே ஆல் பாஸ் ஆக என் வாழ்த்துகள் 💐😊

****

Shaan abi

thank you abi

A review for my காதலின் லிட்மஸ் பரீட்சை…

தோழர்களுக்கு அன்பான வணக்கம்

“சின்ன கிளாஸ் பசங்க தான் நம்மளை ஜீனியஸ் மாதிரி பார்க்கும்.போன எக்ஸாம்ல நான் காம்பஸ் யூஸ் பண்றதை என் பக்கத்துல உக்கார்ந்திருந்த எய்த் ஸ்டான்டர்ட் பொண்ணு எப்டி பாத்திச்சு தெரியுமா?”

“எப்டி பார்த்திச்சு?”

“நான் என்னமோ என் கைல டெலஸ்கோப் வச்சி வானத்துல இருக்கிற ஜீபிட்டரை பாத்துப்பாத்து எக்ஸாம் பேப்பர்ல வரையிற மாதிரி அவ்வளவு மரியாதையா பாத்திச்சுடா”

பள்ளி,கல்லூரி காலத்துல மலரும் காதல் மொட்டுக்களுக்கு எப்பவுமே ஒரு அலாதியான மணம் இருக்கும். இதை சீன் பை சீன் ரொம்பவே அழகா கவிதையா அற்புதமா ரைட்டர் சொல்லிருக்காங்க. இன்டர் ஸ்கூல் காம்படிஷன்,மயில்கள் டேங்க்ஸ் அண்ணாங்கிறது,சிவபிரகாசம் சேர் எல்லாருக்கும் முன்னாடியே எந்த ஸ்கூல்ன்னு சொல்லாமலே வெளுத்து வாங்குறது, தேர்ட் ரன்னர் அப் வாங்கி ஏதோ பர்ஸ்ட் ப்ளேஸ் வாங்குன கணக்கா பார்ட்டி வச்சது, வாட்ஸப், ப்ளொக் பண்றது, ப்ரிட்னி ஸ்பியர்ஸ், ஜஸ்டின் பீபர், அண்ணா யுனிவர்சிட்டி,வாட்ஸப்ல தமிழ் டைப்பிங்,55 மார்க்ஸ், 25 மிஸ்ட் கால்ஸ்,ரெட் கலர் பென்டிரைவ், லிப்ஃட், ரெண்டும் கெட்டான் இப்டி எல்லாமே புடிச்சது.இந்த நாவல்ல நீங்க எழுதின வசனங்கள் எல்லாம் ரொம்பவே வித்தியாசமா எப்டிசொல்றதுன்னு தெரில திரும்ப திரும்ப வாசிச்சு ரசிக்கிற மாதிரி இருந்துச்சி.வாசிக்க மிஸ் பண்ணாதிங்க.

எப்பவுமே நூல்கள் நிறையவே உதவுது.நம்மளை சுத்தி என்ன நடக்குதுங்குறதை யோசிச்சு என்ன வாழ்க்கைடா இதுன்னு தோணும்.ரொம்பவே மனச்சுமை ஏற்படும்.சுமைதாங்கியாவோ அல்லது சுமையை மறந்து மறுத்து வாழ ஒரு புகலிடம் புத்தகங்கள் தானே. அடைக்கலம் தந்த எழுத்துக்களுக்கு நன்றி. நாவல் பெயர் :காதலின் லிட்மஸ் பரீட்சை பாலா சுந்தர் மேம் ரொம்ப அருமையா உங்க படைப்பை தந்ததுக்கு வாழ்த்துகள். தமிழால் இணைவோம்!!! take care தோழர்களே!!hope for the best.

8) வலியா சுகமா எது நீ?

ஜான்சி அவர்களின் முகநூல் விமர்சனம்

அசத்தல் முயற்சி!!!

அறிவியல் பேசும் கதை.

இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னே மதங்கள் இருக்காது என அடித்துப் பேசுகின்றவன். நம்மை யோசிக்க தூண்டுகின்றவன் ஜான் எனும் ராஜா. கிரிஸ்டி (கிறிஸ்டி) இறை நம்பிக்கையில் பூத்திருக்கும் சிறு மலர். அந்த மலரை தன் வீட்டின் திராட்சைக் கொடியாய் மாற்றுவதே இலட்சியம் அந்த இளம் விஞ்ஞானிக்கு…

நாத்திகமும் ஆத்திகமும் மோதினால்… அதுதான் கதை.

இருவரின் இளம் பிராயம் , பள்ளி, நட்பு, கடற்கரை விசிட், இளம் விஞ்ஞானியின் அறிவுபூர்வமான சிந்தனைகள் பேச்சுக்கள் என காட்சிகள் மனதை கொள்ளைக் கொள்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த சீன் லைப்ரரி சீன்…ஜானுக்கு சுவாரஸ்யமாய் தோன்றும் அதே இடம் கிரிஸ்டிக்கு சலிப்பாக தோன்றுவதாக காண்பித்திருப்பது…அப்ளாஸ்…இதைவிட கதாபாத்திரத் தன்மையை உறுதிப் பட சொல்லிவிட முடியாது.

முரண்கள்:

கிறிஸ்தவ உட்பிரிவுகள் புரிந்தவர்க்கு மட்டுமே புலனாகும் முரண்கள் பல. எனவே தனிப்பட்ட விதமாய் ( கன்செப்ட் கருத்துப் பிழையின்றி இருக்க வேண்டும் எனும் நோக்கம் காரணமாக) அத்தனையும் எழுத்தாளருடன் பகிர்ந்தாயிற்று. டேவிட் சீன்கள் இன்னும் அழுத்தத்துடன் இருந்திருக்கலாமோ?

ஜான், கிரிஸ்டி சீன்ஸ் காதலுக்கு பின் கூடுதலாக இருந்திருக்கலாமோ?

இவைகள் மட்டும். வித்தியாசமான கதை விரும்புவோர்..நிறைய தகவல்கள் கதையினூடாக கண்டுணர விரும்புவோர்… தவற விடாதீர்கள்.

மற்றொரு சிறந்த படைப்பு…வாழ்த்துகள் பாலா 🎊

****

Sharing this with joy and happiness…. Finally a few words shared by amirtha sister about my works in FB… thank you Amirtha Seshadri sister

DD மட்டுமே இருக்கும் போது அவார்ட் பிலிம், ஆர்ட் பிலிம் English subtitle ஓட போடுவாங்க. சத்யஜித் ரே, மிருணாள் சென், இங்கே இருந்த துரை, ஜெயகாந்தன் கதை படமா வந்தது. வேறு வழி இல்லாம மாட்டி கிட்டோமேன்னு படத்தை பார்க்க ஆராம்பிப்போம். ஒரு இடத்தில் ஒரு knot la கதை புரிபட ஆரம்பிச்சுடும், அந்த சப்டைட்டில் வருவது கூட இடஞ்சலா இருக்கும். அதுக்குள்ள முடிந்து விட்டதான்னு ஒரு feel வரும்.

இப்ப இவரோட கதைகளை படிக்கும் போது இந்த feel தான் வந்தது, வருது. பத்து பதினைந்து பக்கம் வரும்வரை என்னடா இதுன்னு வரும், சட்டுன்னு கதை புரிந்து வேகம் எடுக்கும் நம் சிந்தனை. எழுதுவது ஒரு கலை தானே!! இந்த போஸ்ட compliment a பார்த்தா compliment. Criticism ஆ பார்த்தா criticism. பார்ப்பவரின் கண்ணோட்டத்தில். For me its a compliment to her Bala Sundar

*********

எனது படைப்பை பற்றி இதுவரை பொறுமையாக வாசித்த நேயர்களுக்கு என் நன்றிகள் பல.

நன்றி

பாலா சுந்தர்

For Amazon Link Click Here

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *