Thachanin Thirumagal : 11 Sivapriya

Published on :

*11*   “உனக்கு அங்க எல்லாம் பொருந்திப் போகுதாடி? உன்கிட்ட முன்னாடியே கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதற்குள் என்னென்னவோ நடந்துப் போச்சு…”  “இப்போவாவது கேட்கணும்னு தோணுச்சே…” என்று அன்னையிடம் அலட்டிக்கொண்டே கால்களை மடக்கி சுவரில் சாய்ந்தமர்ந்தாள் குந்தவை.  திகட்டத் திகட்ட அவளைக் கொஞ்சிவிட்டு ஒருவழியாய் தச்சன் அப்போது தான் மாலை காபி அருந்திவிட்டு வயலுக்குச் சென்றிருந்தான். மாமியாரும் நீ படி என்று அவளை அனுப்பிவிட, அன்னைக்கு பேசிவிட்டு பின்பு படிப்போம் […]

Thachanin Thirumagal : 10 Sivapriya

Published on :

*10*   “என்னங்கடா நடக்குது இங்க? எவன் வீட்டுக் கூடாரத்தில் எவன் குளிர் காயுறது? எழுந்திருங்க தடிமாடுகளா?” என்று கடுகடுத்தவன் வயல் வரப்பில் அங்குமிங்கும் போதையின் பிடியில் விழுந்துக் கிடந்த அவனின் சகாக்களை காலால் எட்டி உதைத்தான்.  புலர்ந்து கதிர்களை வீசத் துவங்கிய ஆதவனின் வெக்கையைக் கூட பொருட்படுத்தாமல் மதுபோதையின் பிடியில் கீழே அலங்கோலமாய் கிடந்தவர்கள் தச்சனின் அதட்டலுக்கு சிறு அசைவைக் கூட காட்டவில்லை. “எவ்ளோடா குடிச்சி தொலைச்சீங்க… இப்படி […]

Thachanin Thirumagal : 9 Sivapriya

Published on :

*9*   குளியறையில் இருந்த போதே சிகரெட்டின் வாடை நாசியை எட்டி குமட்ட, அருகிலுள்ள வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் புகைத்துக் கொண்டிருப்பார்கள் என்றெண்ணி குளித்து உடைமாற்றி வந்தவளின் பார்வையில் சுருள் சுருளாய் புகைவிடும் தச்சனே எதிர்பட ஒருநிமிடம் எதுவுமே புரியவில்லை குந்தவைக்கு.  வேலை, பின்புலம், இருப்பிடம் என்று எதுவுமே அவள் விரும்பியது போல அமையாது இருக்க, தந்தையின் இழப்பு தந்த பாடத்தில் கிடைத்ததை தக்கவைத்துக் கொள்வோம் என்ற முடிவெடுத்து, தச்சனின் […]

Thachanin Thirumagal : 8 Sivapriya

Published on :

*8*   மாலை வேலையெல்லாம் முடித்து வீட்டிற்குள் நுழைந்ததுமே தனக்கு தண்ணீர் எடுத்து வந்து நீட்டியவளை ஆச்சர்யமாய் பார்த்த அன்பரசன், “என்னமா அதுக்குள்ள வந்துட்ட? பரீட்சை முடிஞ்சதும் அனுப்பி வைக்குறேனு தகவல் சொன்னாங்க?” “இங்கிருந்தே போயிக்கிறேன் மாமா. புக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்ற குந்தவை சங்கடமாய் முறுவல் உதிர்க்க, அன்பரசனின் பார்வை கேள்வியுடன் நீலாவை தேடியது. “எப்படி வந்த மா? சங்கடம் ஒன்னும் இல்லையே. இன்னும் ரெண்டு நாள் […]

Thachanin Thirumagal : 7 Sivapriya

Published on :

*7*   “அப்படியே இரு. உள்ள வராத.” என்ற மறுப்புக் குரலில் குழப்பமாய் புருவம் சுருக்கியவன், உள்ளே நுழையாமல் குதித்து திண்ணை திண்டில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி கால்களை ஆட்டிக்கொண்டே, “ஏனாம்?” ஒன்றுமே நடவாதது போல அவன் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்கும் விதம் நீலாவுக்கு எரிச்சலைத் தர, அதை சிறிதும் மறைக்காமல் பெரிதாய் வெளிக்காட்ட காத்திருந்தவர் அதை அடக்கிக்கொண்டு, “துக்கம் நடந்த வீட்டிலிருந்து வந்தால் குளிக்கணும்னு தெரியாதா? வீட்டை […]

Thachanin Thirumagal : 6 Sivapriya

Published on :

*6*   மாற்றம் ஒன்றே மாறாதது என்பது வெறும் வார்த்தை இல்லை போலும் அதிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் மெய். ஆனால் அந்த மாற்றம் எத்தகையது என்பதில் தான் ஒருவரின் மனநலன் தீர்மானிக்கப்படுகிறது. என்ன செய்வது என்று வழி அறியாது சஞ்சலமாய் அலையும் போது வழி கிடைத்துவிட்டால் அந்த மாற்றம் வாழ்க்கையையே மாற்றியமைப்பது போல, இருந்தவற்றை இழக்கும் வலி தரும் மாற்றமும் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்துவிடும். முன்னம் இருக்கும் மாற்றம் ஒருவரை […]

Thachanin Thirumagal : 5 Sivapriya

Published on :

*5*   அவள் கால்பிடித்து அவளது காலடியில் தலை குனிந்து அமர்ந்திருப்பவனைக் காணத் திருப்தியாய் தான் இருந்தது அவளுக்கு. இவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, அதற்கு தூபம் போட்டு நின்றுபோக சாத்தியக்கூறுகள் இருந்த திருமணத்தை இவ்வளவு தூரம் இழுத்து வந்து நினைத்ததை சாதித்துக்கொண்ட தச்சனை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் அவளுள் கனன்று கொண்டிருந்தது. அதெல்லாம் இந்த அற்ப உவகையில் […]

Thachanin Thirumagal : 4 Sivapriya

Published on :

*4*   பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய், “அவங்க வழிவழியா விவசாயம் செய்யுற குடும்பம். குடந்தை பக்கமா தான் இருக்காங்க. வசதி குறைவு தான் என்றாலும் மட்டுமரியாதை தெரிந்த பாரம்பரிய குடும்பம்.” என்று அவர் […]

Thachanin Thirumagal : 3 Sivapriya

Published on :

  *3*   தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவன் இருப்பிடம் குடந்தையை ஒட்டிய ஊராட்சியான திருநறையூரில் இருந்து அவள் வசிப்பிடம் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது. இரண்டு வாடகைக் கார் பிடித்து மகளின் புகுந்த வீட்டினரை மட்டும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தேவையானவற்றை குடந்தையில் வாங்கிவிட்டு பயணமாக, வெள்ளைவேட்டிக்கு தோதாய் அரக்குச் சட்டையில் இருந்தவன் கழுத்திலும், கையிலும் தங்கம் மின்னியது. கண்களை மறைக்கும் விதமாய் ஒரு […]

Thachanin Thirumagal : 2 Sivapriya

Published on :

*2*   “என்னது கல்யாணமா?” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன். அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா?” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில். “நான் எப்போ வேணாம்னு சொன்னேன்? எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்துறது… ஸ்கூல் பையனுங்க கூட காதலிக்கிறேன்னு கண்ணு முன்னாடியே சுத்தி கடுப்பேத்துறாங்க. வாழ்க்கையில் ஒரு கிக்கே இல்லை.” […]