*10*

               

எப்படியாவது   அரியனையை    அபகரிக்க   வேண்டும்   என்ற  எண்ணம்   வளவனின்   மனதினில்   வேரூன்றியது .   அதற்க்காக   எந்த   எல்லைக்கும்   செல்ல   அவன்   தயாராக    இருந்தான் .   நேரடியாக   மோதி    இதை   சாதிக்க   முடியாது   என்பதை   நன்றாக    உணர்ந்த    அவன்   ஒரு    சதித்திட்டத்தை   தீட்ட    ஆரம்பித்தான் .   

          அவனின்   முதல்  எதிரி  அரசன்   ராஜசிம்மன்தான்  என்றாலும்   அவன்  அருகில்  கூட   யாரையும்   நெருங்கவிடாமல்   அரசனை  அரனாக   காக்கும்   விஷ்ணுவர்மனின்   மேல்தான்   அவனின்   கோபம்   இப்போது  திரும்பியது .  முதலில்  விஷ்ணுவர்மனை   அரசனிடம்   இருந்து  பிரிக்க  வேண்டும்   என   முடிவெடுத்தான் .

         அதை  எப்படி   செயலாற்றுவது ?  , என்ன  செய்தால்  இவன்  அரசனை  விட்டு   பிரிவான்  என  யோசித்துக்கொண்டிருக்கும்போது   அன்றொரு  நாள்   சிவாலயத்தில்   ராஜசிம்மன்   விஷ்ணுவிடம்  கூறியவை  நினைவில்   மோதின .  

           “விஷ்ணுவர்மா இந்த கோவிலில் உள்ள  சிவபெருமானின் லிங்கத் திருமேனி மரகதத்தால் ஆனது . அது இந்த கோவிலுக்கு மட்டுமல்ல நம் தேசத்திற்க்கே  கிடைத்த அரிய பொக்கிஷம்” . அதை  நம்மிடமிருந்து பறிக்கத்தான் அந்த வரகுணன் நம்மீது போர்த்தொடுத்தான் எனவும்  , பொதுவாகவே சில  குறிப்பிட்ட  ரத்தினங்களுக்கு  ஆக்ரக்ஷ்ன  ஷக்தி  உண்டு .  அந்த  வகையில்  மரகதத்தை  லிங்க  வடிவில்  வழிபடுவதன்  மூலம்  கேட்ட  வரத்தைப்   பெற முடியும் . மரகதத்தால் ஆன லிங்கத்திற்க்கு தோஷங்களை நிவரத்தி செய்யும் வல்லமையும் அந்த லிங்கம் இருக்கும் தேசத்திற்க்கும்  தேசத்தின் அரசனுக்கும்  செல்வ அபிவிருத்தி , நீண்ட ஆரோக்கியம் கிடைக்கும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.

            அதுமட்டும்  அல்லாமல்   நமது   ஆலயத்தில்   உள்ள  லிங்கம்  இந்திரதேவனால்   வழிபட்டது  என்று  என் பாட்டனார்  என்னிடம்  கூறியுள்ளார் . ஆகையாலேயே  இதை நம்மிடம் இருந்து கவர எதிரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் “ என கூறிய  ராஜசிம்மனின்   வார்த்தைகள்   அவன்   மனதில்   நிழலாடின .

              இதைத்   தொடர்ந்து   விஷ்ணுவர்மன்    பேசியதும்  அவனுக்கு   நினைவில்   உதித்தது . “ தாங்கள்   இதைப்பற்றி   இனி   கவலை   கொள்ள  வேண்டாம்  அரசே  . இனி   இந்த  லிங்கத்தை   காக்க  வேண்டியது  என்   பொறுப்பு  .  நம் ஆலயத்திலிருந்து இந்த லிங்கத்தை எடுத்துச்செல்ல நான் விடமாட்டேன்.  என் உயிர் உள்ளவரை நான் அதைப் பாதுகாப்பேன்”  என  அரசனிடம் விஷ்ணுவர்மன்   வாக்களித்ததும்  நினைவிற்க்கு  வந்தது .

              இந்த  நிகழ்வு   தனக்கு   ஞாபகம்   வந்தவுடன்   “  அடாடா   இந்த  விஷயத்தை   எப்படி  மறந்தேன் .  இந்த  எண்ணம்  எனக்கு   ஏன்  இத்தனை   நாள்   தோன்றாமல்  போய்விட்டது  “ என  நினைத்தவன்   தன்  மனதினில்   தோன்றிய   திட்டத்தைச்   செயல்படுத்த  தக்க   தருணத்தை   எதிர்பார்த்துக்   காத்திருந்தான் .

                  அவன்   எதிர்பார்த்திருந்த   நாளும்   கூடிய   விரைவில்  தானாகவே   வந்தது . ஒருநாள்   அரசவை  கூடியபொழுது   அந்த   செய்தி   வந்தது .  அரசவையுனுள்  நுழைந்த  காவலாளி  “ அரசே   தங்களைக்கான   நமது   அண்டைதேசமான   அங்க  தேசத்திலிருந்து   வந்துள்ளனர் “ என  கூறினான் .

           “ அவர்களை   வரச்சொல்  “ என  ஆணையிட்ட  மன்னன்  அவர்கள்   வந்து   தன்   வணக்கத்தை   தெரிவித்தவுடன்  அவர்கள்   வந்த  விஷயத்தைப்பற்றிக்   கூற   சொன்னான் .

               வந்தவர்கள் “ அரசே   எங்களது   நாட்டில்   திருவிழா   நடக்க   இருப்பதால்   எமது   அங்க  நாட்டு  அரசர்  தங்களிடம்  விழாவிற்க்கான  அழைப்பிதழை   அனுப்பி   வைத்திருக்கிறார் .  தானே   நேரில்   வந்து   அழத்ததாக  கருதி   விழாவிற்க்கு   தவறாமல்   வருகை  புரியவேண்டும்   என்றும்   கூறச்சொன்னார் “ என  உரைத்தான் .

               அதைக்கேட்ட   ராஜசிம்மன்   கட்டாயம்   விழாவில்  கலந்துகொள்வதாக   வாக்களித்தான் . பிறகு   மரியாதை   நிமித்தமாக   பதில்   ஓலையை  எழுதி   அவர்களிடம்   கொடுத்தனுப்பினான் .

                அன்று   இரவு   விஷ்ணுவர்மனை   வரச்சொன்ன  அரசன்   தான்   அங்க  தேசத்திற்க்கு    நாளை   காலை   கிளம்புவதாக  கூறினான் .

                அதைக்கேட்ட   விஷ்ணுவர்மன்  “  அரசே   நானும்   தங்களுடன்   வருகிறேன் “ என  கூறினான் .

                 உடனே   ராஜசிம்மன்    “ தேவையில்லை   விஷ்ணு    நீ   நான்   வரும்வரை    இங்கேயே  இருந்து   அனைத்தையும்   கவனித்துக்கொள் “   என்றான் .

                   “   இருந்தாலும்  அரசே , சிறிது   நாட்களுக்கு   முன்னர்தான்   கானகத்தில்    ஒரு   அசம்பாவிதம்   நடக்க  இருந்தது .   தங்களை  எப்படி   தனியே    அனுப்புவது “  என   ஐயத்துடன்   வினவினான்  விஷ்ணுவர்மன்  .

                         “ கவலைக்கொள்ளத்  தேவையில்லை  விஷ்ணு  ,  அங்கதேச  மன்னன்  என்   பால்ய   சிநேகிதன்   கண்டிப்பாக  இந்த  வைபவத்திற்க்கு    நான்  சென்றே   ஆகவேண்டும் . மேலும்   எனக்கு   அங்கு   எந்த  ஆபத்தும்   நேராது . நான்   பார்த்துக்கொள்கிறேன் “   என  கூறினான் .

                         இதற்க்கு   மேலும்   ஏதும்   பேச  இயலாத  விஷ்ணுவர்மன் “ தங்களது   விருப்பம்   அரசே “   என்று   கூறி   அவ்விடத்திலிருந்து   அகன்றான் .

                          மறுநாள்   பொழுது   புலர்ந்தவுடன்   அரசன்     ராஜசிம்மன்   தான்   மூன்று  நாட்கள்   கழிந்தவுடன்  நம்   தேசத்திற்க்கு   திரும்பிவிடுவதாக   அமைச்சர்களிடமும்  விஷ்ணுவிடமும்  கூறினான் . பின்பு   அரசன்  ராஜசிம்மனும்   அவனுடன்   சில   வீரர்களும்  அங்கதேசத்திற்க்குப்   புறப்பட்டனர் .

                              இந்த   அரிய   சமயத்தை   பயன்படுத்திக்  கொள்ள  வளவனின்  மனம்   துடித்தது .  அவன்   யோசித்து  வைத்த  திட்டத்தை  கூடிய  விரைவில்  தக்க   தருணத்தில்   செயல்படுத்த  எண்ணினான் .

                            ராஜசிம்மன்     அங்க தேசத்திற்க்கு   சென்று   இரண்டு   நாள்   கழிந்து  விட்ட  அந்த   மூன்றாம்  நாளின்   அர்த்த சாம  இராத்திரி  நேரத்தில்   விஷ்ணுவர்மனின்   உடையைப்  போலவே   தான்   தயாரித்து   வைத்திருந்த   உடையை   அணிந்துகொண்டான் .  முகத்தைமட்டும்  ஒரு  துனியால்  கண்கள்   மட்டும்  தெரியும்படி   மூடிக்கொண்டான்.

                           அவனின்   கால்கள்  நேராக    சிவாலயத்தை   நோக்கி   பயணித்தது .  கோவிலை  வந்தடைந்தவன்  கருவறையில்   இருக்கும்   மரகத லிங்கத்தை  நோக்கினான் .   அதை  பார்த்தவன்   “ என்   தமையன்   உன்னை   உயிர்ப்போல்   நேசிக்கிறான்   அல்லவா ?  இனி   உன்னை  வைத்தே   காய்களை   நகர்த்தி   நான்  கொண்ட   சபதத்தில்   வெற்றி   அடைகிறேன் “ என   கருவினான் .

                        அந்த   லிங்கத்திருமேனியை    அதன்   பீடத்திலிருந்து  மிகப்பிரையாசைப்பட்டு   தகர்த்தான் .  பின்பு   அந்த   லிங்கத்தை   தன்   கரங்களால்   எடுத்தவன்   அதைத்  தன்   தோளின்   மீது   வைத்தான் . 

                        பின்பு    கோவிலில்  இருந்து   வெளிவந்தான்    வளவன் .   அப்படி   வெளியே   வந்தவனை   அக்கோவிலின்   காவல்காரன்   பார்த்துவிட்டான் .  வளவன்   தரித்திருந்த  உடையும்   அணிகலன்கலும்   அச்சுஅசல்   விஷ்ணுவர்மனைப்போலவே   இருந்ததால்  அந்த  காவல்காரனும்   அவனை   விஷ்ணுவர்மன்   என்றே   நினைத்துவிட்டான்  .

                     “  சேனாதிபதியாரே ! சேனாதிபதியாரே  !  என   அழைத்துக்கொண்டே    சுவாமி   சிலையை   எங்கே  எடுத்துக்கொண்டு   செல்கிறீர்கள்  என்று   கூறியபடி   பின்னாலேயே   ஓடினான் . நன்றாக   உடற்பயிற்ச்சி   செய்து   உடம்பை   பலமாக   வைத்திருந்த   வளவனால்  அந்த  லிங்கத்தை   தோளில்   சுமந்துகொண்டே   வேகமாக   ஓடுவது   அப்படி   ஒன்றும்  கடினமான   காரியமாக   இருக்கவில்லை  .  பிறகு  என்ன  நினைத்தானோ   திடீரென்று   ஓரிடத்தில்   நின்றான் .   பிறகு    தன்னை   துரத்திக்கொண்டு    ஓடிவரும்   காவலாளியைக்  கண்டவன்   அவன்   அருகில்   வந்தவுடன்   முகத்தின்மேல்   ஓங்கி   குத்தினான் .  காவலாளியோ   அவ்விடத்திலேயே   மயங்கிச்  சரிந்தான் .

          இதற்க்குள்    மற்ற   காவலர்களும்    முதல்  காவலன்    போட்ட    சத்தத்தில்   அங்கே    குழுமினர்   .   அவர்ககளையும்   வளவன்   விட்டுவிடாமல்   மயக்கம்   வரும்  வரை  அடித்துச் சாத்தினான் . முகமூடி   அணிந்திருந்த   காரணத்தினால்    வளவன்தான்   என்று  யாருக்கும்  தெரிய   வாய்ப்பே   இல்லாமல்   போய்விட்டது .   தங்களை   அடித்ததும்   சிலையை   கடத்தியதும்   விஷ்ணுவர்மன்தான்    என  எண்ணினர் .

                      மறுநாள்   பொழுது   புலர்ந்தவுடன்    மிகச்சோம்பலாக   புலர்ந்த   பல   திருப்பங்களைத்  தர  காத்திருந்தது  .   அங்கதேச   திருவிழா   வைபவத்தில்   கலந்து   கொண்டு   தன்   தேசத்திற்க்கு   திரும்பிய   ராஜசிம்மனுக்கு   அதிர்ச்சியே   காத்திருந்தது . 

                   மரகத  லிங்கத்தை   காணமல்   போனது   முதல்   அதிர்ச்சி   எனில்    , அந்த   மரகத  லிங்கத்தை    களவாடிய   குற்றம்   விஷ்ணுவர்மனில்   மேல்   சுமத்தப்பட்டது   அடுத்தகட்ட  அதிர்ச்சியாக   இருந்தது . எப்படி  இது   சாத்தியம் ? . எப்படி   இப்படி  நடந்தது ? என்ற  கேள்வியே     அவனின்   மனத்தினை   அரித்துக்  கொண்டிருந்தது .

                 அரசவையில்    சிங்காதனத்தில்   அமர்ந்திருந்த   ராஜசிம்மன்   சிவாலயத்தின்   காவலாளியை   அழைத்து   விசாரித்தான்  .  “ அரசே   நான்   அயர்ந்து   தூங்கிக்  கொண்டிருந்த   வேளையில்   ஏதோ   சப்தம்   கேட்கவே   திடுக்கிட்டு   எழுந்தேன் .  எழுந்து   பார்த்தால்   கோவில்   கதவு   திறந்திருந்தது . பின்பு   வாசல்   பக்கமாக   ஏதோ   நிழலாடியது   போல்   இருந்ததால்   நான்   பதட்டமடைந்து   கோவிலின்  வாயிலருகே   சென்றேன்  . அதற்க்குள்   அந்த   உருவம்   வாயிலில்   இருந்து   வெளியே   வந்தது .  பார்த்தவுடன்   எனக்கு   அதிர்ச்சியில்  நாவே  எழவில்லை  அரசே  .   நம்   சேனாதிபதியார்தான்   நம்    சுவாமியின்   திருவுருவத்தை   தன்   தோளில்   சுமந்து   கொண்டு   வந்தார் .  நான்   அவரை   அழைத்ததும்   திரும்பி  என்னைப்பார்த்தவர்  என்னை   அடித்து  விட்டார்.  நான்   அந்த   இடத்திலேயே  மயங்கி  விட்டேன் “  என  கூறினான் . மேலும்   தான்   மயங்கி  விழும்போது   அவ்விடத்தில்   இருந்த  விஷ்ணுவின்   மோதிரத்தையும்   அரசனிடம்   கொடுத்தான்  அந்த  காவலாளி .

                அந்த   மோதிரத்தைப்பார்த்த   வளவன்   தனக்கள்ளேயே   சிரித்துக்கொண்டு    அன்று   நடந்ததை  நினைத்துப்பார்த்தான் .

                   சம்பவம்  நடந்த  அந்த   நாளில்  சிறிது  நேரத்திற்க்கு  முன்னர்    யாரும்   அறியா  வண்ணம்   விஷ்ணுவர்மனின்   அறைக்குள்   நுழைந்தன்   வளவன்  .  அவ்வறையில்   அப்பொழுது   யாரும்   இல்லை  என்பதை   உறுதி   செய்துகொண்டான்  . பின்பு   விஷ்ணுவர்மனின்   படுக்கையின்   அருகில்   இருந்த  மேசையில்   விஷ்ணுவர்மனின்   கைவிரல்களில்   எப்போதும்  தவழும்   மோதிரம்   இருந்தது  .   அதை  ராஜசிம்மனே   விஷ்ணுவர்மனிற்க்கு  பரிசாக   அளித்திருந்தான் .

                 அந்த   மோதிரத்தைப்பார்த்ததும்   ராஜசிம்மனின்  அதிர்ச்சி பன்படங்கு   அதிகமானது .  விஷ்ணுவர்மனின்  மேல்   குருட்டு   நம்பிக்கை   வைத்துவிட்டோமோ  என  எண்ணி   வருத்தமடைந்தான் .

                 ராஜசிம்மன்    விஷ்ணுவர்மனின்   புறம்   தன்   பார்வையை   திருப்பினான் .  விஷ்ணுவர்மா   என்ன  இதெல்லாம் ? உன்  மீது   அளவிற்க்கு  அதிகமாக   நம்பிக்கை   வைத்திருந்த   என்னையே  ஏமாற்றிவிட்டாயே  என  கருவினான் .

                “ அரசே  கடவுள்   மீது   சத்தியமாக   இதை   நான்   செய்யவில்லை  .  சம்பவம்   நடந்த  அன்று   நான்  என்   அறையில்தான்   இருந்தேன் .  இவர்கள்   ஏன்   இப்படி   என்  மேல்   பழி   சுமத்துகிறார்கள்  என  நான்   அறியேன்  “  என   உரைத்தான்  .

                   “  அப்படி   என்றால்   நான்   உனக்கு   பரிசாக   அளித்த   மோதிரம்  எப்படி   அவர்களிடம்   சென்றது  .  எனக்கு   நன்றாக   நினைவில்   இருக்கிறது   அது   நான்  உனக்களித்த   மோதிரம்தான்   அதில்   எள்ளளவும்    சந்தேகமில்லை . இது   எப்பொழுதும்   உன்   கைகளில்தானே   இருக்கும்   இன்று  எப்படி   அவர்களிடம்   சென்றது “ என  சினம்   கொப்பளிக்க   விஷ்ணுவிடம்   கேட்டான்   ராஜசிம்மன் .

               “   அரசே   அதுதான்   எனக்கும்    விளங்கவில்லை   நான்   அதை  என்   அறையில்தான்   கழற்றி  வைத்தேன் .  திரும்பிவந்து   பார்த்தால்  அது  அவ்விடத்தில்  இல்லை .  எப்படி   மாயமானது  என்று  எனக்கு   விளங்கவில்லை  அரசே “ என  கூறினான்.

                  இதற்க்குள்   இடையில்   புகுந்தது   வளவனின்  குரல் .  “  அரசே   குற்றவாளி   இவன்தான்   என்று   ஆதாரத்துடன்   ஊர்ஜிதமாகிவிட்டதே  ! இனி  இவனின்  வாதத்தைக்கேட்டு  என்ன  பயன் .  இவன்   அந்த   சிலையை  எங்கே   வைத்திருக்கிறான்  என  கேளுங்கள் “  அரசே  “என  கூறினான் .

                  ராஜசிம்மனும்    விஷ்ணுவர்மனிடம்   “ விஷ்ணுவர்மா  உன்   மேல்   நான்   வைத்திருந்த  நம்பிக்கையை   சுக்குநூறாக  உடைத்துவிட்டாய்  .  மரியாதையாக  சொல்   அந்த  லிங்கத்தை  எங்கே  வைத்திருக்கிறாய் “ என  கோபத்துடன்  கேட்டான் .

              “ அரசே  நான்  சொல்வது  அனைத்தும்   உண்மை . நான்   நிஜமாகவே   யாதொரு  தவறும்  செய்யவில்லை  . அந்த  சிவலிங்கத்தை  பாதுகாப்பேன்  என்று  சொன்ன  நானே  அதை   எப்படி   களவாட      முடியும் ? “  என  கூறினான் .

                “ அதைத்தான்   நாங்களும்   கேட்கிறோம் .  எப்படி  உன்னால்   அதை  செய்ய  முடிந்தது .  எதிரி  நாட்டு   மன்னனுடன்   கூட்டு   சேர்ந்து  அந்த  லிங்கத்தை   களவாடி  , நீ  அவர்களுக்குத்தான்  விசுவாசமானவன்  என்பதை  நிரூபித்து  விட்டாய் “ என  வளவன்   தன்  பங்கிற்க்கு   எரியும்   தீயில்   நெய்யை   ஊற்றினான் .

                    ராஜசிம்மனுக்கும்   வளவன்   கூறியது   உண்மையாக   இருக்கக்கூடுமோ  என்ற   ஐயம்   மேலோங்கியது .  விஷ்ணுவர்மன்  எதிரிநாட்டு   மன்னனுக்கு   விலைபோயிருப்பானோ  என்ற  எண்ணம்   தோன்றியது .

                 “ விஷ்ணுவர்மா   உனக்கு  இறுதி எச்சரிக்கையை விடுக்கிறேன் ….   உண்மையைக்கூறிவிடு   இல்லையெனில்   கடும்  விளைவுகளை   நீ   சந்திக்க   நேரிடும்   “ என்ற  எச்சரிக்கையை   விடுத்தான்    ராஜசிம்மன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *