காற்றாய் வருவேன்

டிவியில் லயித்திருந்த தேவாவை போன் சத்தமிட்டு கலைத்தது.

மாலினி ஒரு கால்கேர்ள், பணத்திற்காக அவன் இஷ்டத்திற்கு ஆடும் பொம்மை.

தேவா அவள் வீட்டிலிருந்தான்.

“தேவா… எனக்கு பயமாக இருக்கு. நான்கு நாட்களாக வீட்டில் என்னென்னமோ நடக்குது… கரன்ட் இருந்தாலும் லைட், பேன் போட்டால் ஆன் ஆக மாட்டேங்குது. ஜன்னல், கதவு எல்லாம் சினிமாவில் வருகிற மாதிரி தானாகவே பட்பட்டென்று அடித்துக் கொள்கிறது!” என்றாள் மிரட்சியோடு.

“ஏய்… அறிவில்லை. என்ன சினிமா கதை சொல்லிக் கொண்டிருக்கிறாய்?” என்று அலட்சியமாக கேட்டான்.

அப்பொழுது பட்டென்று வாசல் கதவு சாத்திக் கொண்டது. அவன் திறக்க முயன்றும், முடியவில்லை.

அங்கிருந்த சான்ட்லியர் திடீரென்று வெடித்துச் சிதறியது. அவன் நடப்பதை திகைப்போடு பார்த்திருக்க…

உடைந்த துண்டுகள் அங்கும் இங்கும் தானாக நகர்ந்து, வார்த்தை வடிவம் வந்தது.

“சந்திரன்”

அவர்களால் ஆறு மாதங்களுக்கு முன் கொலை செய்யபட்டவன்.

லேசாக மூக்கை உறிஞ்சிய தேவா கண்களை விரிக்க… சிலிண்டர் வெடித்து சிதறியது.

2 thoughts on “100 words story – Deepababu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *