1

 

அழகான அதிகாலை பொழுது… மரத்தில் துயில் கொண்ட பறவைகள் தன் உணவை தேடி பறக்கும் ஓசை… சிட்டுக்குருவிகளின் இன்னிசை பாடல்கள்….சூரிய பகவானின் ஜன்னல் வழி தரிசனம்… சமையல் அறையில் இருந்து வரும் விசில் சத்தம்.. அதைவிட சத்தமாக கேட்கும் தன் அருகில் வைத்திருக்கும் கைப்பேசியின் அலாரம்…. இவை அனைத்தும் முயற்ச்சித்தும் நம் கதையின் நாயகி விஜயதர்ஷினி ஷார்ட்டா விஜி துயில் எழவில்லை… காரணம் இன்று ஞாயிறு விடுமுறை… விஜி எழுவதற்குள் அவளைப்பற்றி சில குறிப்பகள்… அப்பா குருமாணிக்கம், பிசினஸ் மேன்.. அம்மா நிர்மலா, இல்லத்தரசி… அண்ணன் விஜயதர்ஷன், பிசினஸில் அப்பாவின் வலது கை… அண்ணி ஹரிணி,இல்லத்தரசி… வீட்டின் கடைக்குட்டி நம் விஜி… கலகலப்பான பெண் அனைவருக்கும் செல்லம் படிப்பில் சுட்டி தற்போது M.A.,B.Ed முடித்துவிட்டு தான் படித்த பள்ளியில் சிறந்ந ஆசிரியை…. விஜியை பற்றி மற்றதை கதையில் பார்போம்…

           விஜய் நீ நம்ம PM அறவிப்ப பத்தி என்ன நினைக்குற?
           ம்ம்…அப்பா கருப்பு பணம் இல்லாத இந்தியாவ நம்ம சீக்கிரமே பார்போம் பாருங்க… மோடி ஜி நல்ல முடிவுதான் எடுத்துருக்காங்க.
          ஹாலில் தந்தையும் மகனும் பேசியபடி உட்கார்ந்திருந்தார்கள்.
              அம்மா… அம்மா என் பின்க் ஷர்ட்ட எங்க வச்சீங்க… எவ்ளோ நேரமா தேடியும் காணும்.
             அந்த ஷர்ட்ட நீ இரண்டு நாள் முன்னதன போட்ட அயர்ன் பன்ன குடுத்துருக்கேன் வேற போட்கோ… தன் மகளின் கேள்விக்கு கிட்சனில் இருந்தே பதில் தருகிறார் நிர்மலா.
              அம்மா கொஞ்சம் இங்க வாங்களேன்.. எனக்கு என்ன டிரெஸ் போடனு தெரில.
              இவளுக்கு இதே வேளையா போச்சு… எப்ப பாரு அம்மா இத காணும் அம்மா அத காணும்னு கூப்ட வேண்டியது… ஹரிணி நீ கொஞ்சம் இந்த பாலை பார்த்துக்கோ மா கொதிச்சதும் அடுப்ப அமத்திரு.. நான் அவள பார்த்துட்டு வரேன்.
              சரி அத்தை என்று அடுப்பை தன் பொறுப்பில் ஏற்றாள் ஹரிணி.
              இது தினமும் நடக்கும் நாடகம் என்பதால் தந்தையும் மகனும் சிரித்துவிட்டு அமைதியாக இருந்தனர்.
              சிறிது நேரத்தில் தாயும் மகளும் கீழே இறங்கி வந்தனர்… விஜி மாநிறம்… நல்ல அழகு… வசிகரிக்கும் முகம்… ஜீன்ஸ் ரெட் டிஷர்ட் போட்டிருந்தாள்…
             ஹரிணி அவளுக்கு காபி கப்பை கொண்டு வந்து தந்தாள்… அதை வாங்கிக்கொண்டு தேங்க்ஸ் அண்ணி என்றவிட்டு தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள்…
            உன் பிரண்ட் சுகன்யா வீட்டுக்கு போணும்னு சொன்னேல டா…. நான் வேனா டிராப் பண்ணவா?
            இல்ல அப்பா வேணாம் வினி வரேன்னு சொல்லிருக்கா… வந்து பிக்அப் பண்ணிக்குவாப்பா…
             ஓகே டா… பார்த்து போய்ட்டு வா.
             ம்ம்.. சரி ப்பா
             எல்லாரும் சாப்ட வாங்க.. ஏய் விஜி நீ சீக்கிரம் சாப்டு… அந்த போன வச்சுட்டு வா….இல்லேனா அதையே பாத்துட்டு இருப்ப…அப்டி என்னதான் இருக்கோ அதுல…
             விடு நிம்மி அவ என்ன சின்ன பிள்ளையா?
              அப்பா… இதெல்லாம் ஓவர்… நானும் அவளும் சன்ட போடும் போதும் மத்த விஷயத்துல எல்லாம் அவ சின்ன பிள்ளை…அம்மா எதாது அட்வைஸ் பண்ணா மட்டும் அவ பெரிய பிள்ளையோ? விஜய் விஜியை பார்த்து முறைத்துக்கொண்டே கூறினான்.
              விஜய் உனக்கு பொறாமை டா..
              ஏய் எத்தன தடவ சொல்ரது அவன பேர் சொல்லி கூப்டாதனு?
              அவனுக்குனு ஒருத்தி வந்துட்டா… கொஞ்சமாது மரியாதயா பேசி பழகு விஜி.
              ஐயோ காலைலயே ஆரம்பிக்காத ம்மா….ப்ளிஸ்.
             அதற்குள் அனைவரும் சாப்ட்டு முடித்திருந்தனர்…. அப்போது காலிங் ஓசை கேட்டு விஜி வினி என்ற கூவழுடன் வாசலுக்கு ஓடினால்….

Hello everyone.. i wrote this story in Wattpad.. with deepa sis support i m writing it again here.. if u want me to continue writing.. please comment in this section. It is a family love story. I can assure you will love the flow of story.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *