*9*

 

இரவு வெகுநேரம் கழித்து தூங்க ஆரம்பித்த விஜியை அதிகாலையில் நிர்மலா எழுப்பினார்…

“அம்மா… இது அநியாயம்…” விஜி தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு சிணுங்கினாள்..

“எதுடி அநியாயம்..?”

“இப்பதான் தூங்குனேன்…அதுக்குள்ள எழுப்புறேங்க…”

“தூங்கி எழுந்த முகத்துடன் கண்ணை கசக்கிக் கிட்டு… அப்படியே நீ மணமேடைக்கு போய் உட்காருவாயா?”

அப்போது அங்கு ரெடியாகி வந்த ஹரிணி விஜியை தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு தன் அத்தையை கிளம்ப அனுப்பிவைத்தாள்…. சிறிது நேரத்தில் கிளம்பி வந்தனர் வினியும் சுகன்யாவும்… விஜி குளித்து உடை மாற்றி வெளியே வரவும்… அழகு நிலையத்தில் இருந்து பெண்கள் வரவும் சரியாக இருந்தது…. அவர்களின் கைவண்ணத்தால் இயற்கையிலேயே அழகான விஜி ஜொலித்தாள்…

மங்கலகரமான நாதஸ்வரத்தின் இனிமையான நாதம் திருமண மண்டபத்தை நிரப்பியிருந்தது..

மணமேடையில் சிவா ஆணழகனாக வீற்றிருந்தான்…. அவன் கண்கள் விஜியையே தேடின…

வாசலில் சத்யனும் சுசித்ரனும் தன் பக்க சொந்தங்களை அழைக்க…. விஜயதர்ஷன் தன் பக்க சொந்தங்களை அழைத்துக்கொண்டிருந்தான்…

வாசலில் நின்றாலும் சத்யனும் விஜயும் உள்ளே தன் உறவினர்களை நலம் விசாரித்த தன் ஜோடிகளை சைட் அடிப்பதை நிறுத்திவில்லை…. இதை கவனித்த சுசித்ரன் கிண்டலடிப்பதையும் நிறுத்தவில்லை…

முகுர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருக்க… குடும்பத்தினர் அனைவரும் மேடையேறினர்…

“பெண்ணை அழைச்சுட்டு வாங்க…”

அந்த குரலுக்காகவே காத்திருந்தவன் போல மணமகள் அறையை சிவா திரும்பி பார்த்தான்…

அங்கு சுமி, நிலா, வினி, சுகன்யா உடன்வர அழகு ரதியாய் நடந்து வந்த தன் தேவதையை கண் இமைக்காமல் பார்த்தான்…

நடந்துவந்த விஜி நிமிர்ந்து இவனை பார்க்க… அவன் அவளை பார்த்து கண்ணடித்தான்… உடனே வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள்…

“கெட்டிமேளம்… கெட்டிமேளம்” என்று ஐயர் சொன்னவுடன் தன் வாழ்வில் வசந்தமாக வந்தவளை தன்னவளாக்கிக் கொண்டான் சிவா…

மாணிக்கம் நிர்மலாவின் கண்கள் நிரைந்தது…

………………

“ஏய் வினி அந்த ஊக்கை எடுடி” என்றாள் சுகன்யா..

“இருடி வரேன்” என்றாள் வினி..

“அண்ணி செமையா இருக்கீங்க” என்றாள் சுமி…

“விஜி இதையும் போட்டுக்கோடா..” என்று விஜிக்கு இன்னும் ஒரு டஜன் வளையலை ஹரிணி அணிவித்தாள்…

“ஐயோ அண்ணி இப்பயே நிறையா இருக்கு..” என்று சிணுங்கினாள் விஜி…

அவர்கள் அனைவரும் விஜியை இரவுக்காக தயார்படுத்திக் கொண்டிருந்தனர்…

அங்கு சிவாவின் ரூமில் சத்யனும் சுசித்ரனும் சேர்ந்து செய்த லூட்டிக்கு அளவே இல்லை… இருவரும் சேர்ந்து சிவாவை ஓட்டி எடுத்தனர்…

அனைவரும் சிவாவின் வீட்டில் இருந்தனர்…

ஹாலில் சுந்தரம் – லஷ்மி…. மாணிக்கம் – நிர்மலா…. அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்… அவர்கள் அனைவருக்கும் நிலா பால் காய்ச்சிக்கொண்டிருந்தாள்…

அனைவரின் முகமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது…

இரவு எட்டு மணியைப் போல விஜி சிவாவின் அறைக்கு அனுப்பப்பட்டாள்..

கதவின் அருகில் வந்து நின்ற தன் மனைவியை கண்களால் மேலிருந்து கீழ்வரை பார்த்தான் சிவா…

எழுமிச்சை பழ நிறத்தில் இருந்த மெல்லிய மைசூர் பட்டுச்சேலை மெலிதாக அவளது உடலைச் சுற்றியிருந்தது… தளரப் பின்னப்பட்ட கூந்தலில் மொட்டு மொட்டான மல்லிகை மலர்ச்சரம் தோள்களில் வழியும்படி சூட்டப்பட்டிருந்தது… கழுத்தில் காலையில் கட்டப்பட்ட புது மஞ்சள் தாலிச்சரடு மின்ன அதற்குத் துணையாக மெல்லிய சங்கிலியும் உள் கழுத்தில் வைர அட்டிகையும் மின்னின… காதுகளில் வைர ஜிமிக்கிகள் ஆடின… கைகளில் தங்க வைர வளையல்களும் குலுங்கின… நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டிருந்தாள்…

இவள் தனக்கானவள் என்ற எண்ணமே சிவாவிற்கு இனித்தது…

மெல்ல அவளை உள்ளிழுத்து கதவை மூடினான்… பூட்டிய கதவின் மேல் அவளை சாய்த்து மல்லிகை பூவின் மனத்தை நுகர்ந்தான்… அவனின் அருகாமையில் அவள் தன்னை இழந்தாள்…

அவளை தன் கைகளில் ஏந்தி கட்டிலில் அமர வைத்தான்.. தானும் அருகில் அமர்ந்தான்…

“தர்ஷு…” என்று மெல்ல அழைத்தான்…

“ம்ம்…” என்றாள்..

“என் முகத்தை பாரேன்…”

“மாட்டேன்..” என்று இடதும் வலதுமாக தலையாட்டினாள்…

குனிந்திருந்த அவள் தலையை மெல்ல தன் விரலால் உயர்த்தினான்..

“எவ்ளோ அழகா இருக்க தெரியுமா… ஐ அம் சோ லக்கி டா” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்…

மெல்ல அவன் உதடு அவளின் முகத்தில் ஊர்வலம் நடத்தியது… கடைசியாக தன் இணையோடு சேர்ந்தது…

மெல்ல இருவரும் ஒருவருள் மற்றொருவர் கரைந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *