*8*

 

விஜி வினி சுகன்யா மூவரும் பேசிக் கொண்டிருந்தபோது விஜியின் போன் அழைத்தது…

விஜி எடுத்து “ஹலோ” என்றாள்… எதிர்புறம் பரபரப்பாக பேசினார்கள்…

“மேடம் நீங்க யாருனு தெரில… இங்க இந்த போனோட ஓனர்க்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு… அவர் போன்ல இந்த நம்பர ‘ஸ்வீட் ஹார்ட்’ னு சேவ் பண்ணிருக்கார்… அவர இங்க மாதவன் ஹாஸ்பிடல்ல சேத்துருக்கோம்… நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்று அழைப்பை துண்டித்தார்…

இதை கேட்ட விஜி அதிர்ந்தாள்… யார் அது… இது ரஞ்சனோட அலைபேசி எண் இல்லை… யாராக இருக்கும் என்று யோசித்தாள்…

உடனே சிவாக்கு டயல் செய்தாள்… அவன் எடுத்து…”ஹாய் டா தர்ஷுமா… என்ன பண்ற?” என்றான்…

” ரஞ்சன்.. ஒரு முக்கியமான விஷயம்” என்று நடந்த அனைத்தையும் கூறினாள்…

சிவா உடனே தான் சென்று பார்ப்பதாக கூறி புறப்பட்டான்…

சிவா திருமணத்திற்கு வந்திருந்த தன் நண்பன் விஷ்வாவையும் உடன் அழைத்து வந்திருந்தான்…

அங்கு ஹாஸ்பிடல் சென்று பார்த்தால் அது ஒரு நாடகம்… விஜியை வரவழைப்பதற்காக ஸ்ரீராம் போட்டது என்று தெரியவந்தது…

ஹாஸ்பிடல் வாசலில் இருந்த கௌஷிக்… முதலில் சிவாவை பார்த்தவுடன் அதிர்ந்தான்… பிறகு நடந்த அனைத்தையும் கூறினான்…

—————————

அன்று குடி போதையில் தான் தன் நண்பன் உளறுகிறான் என்று நினைத்தான் கௌஷிக்… அதனால் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை…

ஆனால் ஸ்ரீராம் எப்படியாவது விஜியின் திருமணத்தை நிறுத்துவதில் குறியாக இருந்தான்… கௌஷிக் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை அவன் கேட்பதாக இல்லை….

நண்பனின் குணத்தை அறிந்த கௌஷிக்.. அவன் வழியில் சென்று என்ன செய்கிறான் என்று பார்த்து விஜியை காப்போம் என்று முடிவெடுத்தான்…

அதன்படி ஸ்ரீராம்க்கு உதவி செய்வதாக நடித்தான்… அதை நம்பிய அவன் தன் சூழ்ச்சியை கௌஷிக்கிடம் கூறினான்… திருமணத்திற்கு முதல் நாள் விஜியின் நம்பருக்கு அழைத்து தனக்கு ஆக்சிடன்ட் என்று கூறி அவளை ஹாஸ்பிடல் வரவழைத்து கட்டாயத் தாலி கட்டுவதே அவனின் திட்டம்… அவன் சொல்படியே கௌஷிக் நடந்தான்… விஜியை அழைத்தது வரை… அதன் பிறகு அவன் ஹாஸ்ப்பிட்டல் வாசலிலேயே நின்றான்… விஜி வந்தால் நடந்ததை சொல்லி திருப்பி அனுப்பிவிட்டு அவள் வரவில்லை என்று ஸ்ரீராமிடம் கூறவேண்டும் என்ற முடிவுடன்….

ஆனால் அவன் சிவரஞ்சனை அங்கு எதிர்பார்க்கவில்லை… இதை அனைத்தையும் கூறி முடித்தவுடன் சிவா அதிர்ந்தான்… விஜி எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பியிருக்கிறாள்…. அவள் இங்கு வந்து எதிர்மறையாக நடந்திருந்தால்… அவளின் நிலை என்ன… நல்லவேளை தான் இங்கு வந்தோம் என்று நிம்மதி அடைந்தான்…

ஸ்ரீராம் மேல் கோவத்துடன் உள்ளே சென்று அவன் சட்டையை பிடித்தான்… இந்த ஒருதடவை உன்னை விடுகிறேன் இனிமேல் விஜியைப் பற்றிய நினைப்புகூட உனக்கு வர கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றான்….

அவன் வீட்டை அடையவும் விஜியிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது… அழைப்பை ஏற்ற சிவா… “ம்ம் சொல்லுடா” என்றான்…

“என்ன ரஞ்சன்… என்ன ஆச்சு… அது யாரு?” என்றாள்…

“ம்ம் போனேன் டா… அது ராங் நம்பர்… உன் நம்பருக்கு தப்பா டயல் பண்ணிடாங்க… அவங்க வீட்ல சொல்லிட்டேன் நீ கவலை பட வேண்டாம்” அவளை டென்ஷனாக்க வேண்டாம் என்ற முடிவுடன் உண்மையை மறைத்தான்..

“ஓ ஒகே ஒகே… இப்பதான் டென்ஷன் குறைஞ்சது… சாப்டாச்சா?”

” சாப்பிட்டேன் டா… நீ?

” முடிஞ்சது…”

“ஓகே டா நீ தூங்கு நமக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்கு” என்று சொல்லி சிரித்தான்…

இவளுக்கு இங்கு முகம் அந்தி வானமாக சிவந்தது… “போங்க ரஞ்சன்… இதே பொழப்பா போச்சு உங்களுக்கு… குட் நைட்” என்று கூறி போனை வைத்தாள்…

“சிவா சிவா”..லஷ்மி அவனை அழைத்தாள்…

“என்ன மா?”

“நாளைக்கு சீக்கிரம் கிளம்பனும்… போய் படுடா.” என்றாள்..

“ம்ம் சரி மா.” என்று படுக்க சென்றான்…

சிவாவின் மிரட்டலில் ஸ்ரீராம் அடங்கிவிடுவானா? இல்லை தொல்லைகள் தொடருமா?

பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *