*7*

 

சிவாவும் விஜியும் கைகள் கோர்த்து முகத்தில் புன்னகையுடன் கீழே இறங்கி வந்தனர்…

அவர்கள் முகத்தில் தோன்றிய புன்னகையே அவர்களின் சம்மதத்தை மற்றவர்களுக்கு உணர்த்தியது…

சுந்தரம் புன்னகையுடன் லஷ்மியிடம் திரும்பி “இன்றே விஜிக்கு பூவைத்து கல்யாணத்திற்கு நாள் குறித்திடுவோமா?” என்றார்…

“ம்ம் சரிங்க” என்றார் லஷ்மி சந்தோஷமாக…

“உங்களுக்கு சம்மதம் தானே சம்பந்தி” என்றார் சுந்தரம் மாணிக்கமிடம்…

“சரிதான் சம்பந்தி” என்றார் அவர் மனைவியிடம் கண்களிலேயே கேட்டபடி….

அதன் பிறகு எல்லா நிகழ்ச்சிகளும் விரைவில் நடந்தேறியது… விஜிக்கு பூவைத்தனர்…

மாணிக்கம் சீரைப்பற்றி பேச்சை எடுத்தபோது சுந்தரம் விஜி எங்கள் வீட்டு மகள்… அவள் மட்டும் வந்தாள் போதும் என்று கூறிவிட்டார்….

மாணிக்கம் – நிர்மலா பெண்ணின் வாழ்க்கை நல்லபடியாக அமையும் என்று நம்பிக்கையுடன் தேதியை குறித்தனர்… சரியாக ஒருமாதம் கழித்து திருமணத்திற்கு நாள் குறித்தனர்…

விஜி நிலாவுடனும் சுமித்ராவுடனும் நன்றாக ஒட்டிக்கொண்டாள்…

சத்யனும் சுசித்ரனும் சேர்ந்து சிவாவை ஓட்டி தள்ளிவிட்டனர்…

ஒருமாதம் ஒருநொடியில் சென்றது மற்றவர்களுக்கு… ஆனால் சிவாவும் விஜியும் நெட்டி தள்ளினர்…

இருவரும் இரவு முழுவதும் போனில் பேசினர்….

முகூர்த்தப்பட்டு அனைவரும் ஒன்றாக சென்று எடுத்தனர்… விஜி சிவாவின் சம்மதத்தை கண்களாலேயே கேட்டு ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்தாள்…

கல்யாணத்திற்கு முதல் நாளே விஜியின் தோழிகள் இருவரும் விஜியின் வீட்டிற்கு வந்துவிட்டனர்….

மூன்றுபேரும் சேர்ந்து நன்றாக லூட்டி அடித்தனர்…. அப்போது விஜியின் கைப்பேசி ஒலித்தது… “ரஞ்சனாகதான் இருக்கும்… இருங்க பேசிவிட்டு வரேன்” என்று எழுந்து சென்றாள்….

அன்னோன் நம்பரில் இருந்து அழைப்பு வந்திருந்தது…. யார் என்று யோசித்துக்கொண்டே அழைப்பை எடுத்தாள்…. காதில் வைத்து “ஹலோ” என்றவள் அந்த பக்கம் இருந்து வந்த பதிலில் திகைத்தாள்….

அப்படி யார் அழைத்து என்ன கூறினார்கள்? விஜியின் திகைப்பிற்கு காரணம் என்ன? தெரிந்துக்கொள்ள காத்திருங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *