*5*

 

மச்சான்.. எனக்கு என்ன டா குறைச்சல்… ஏன் டா என்ன வேண்டாம்னு சொன்னா? கண்டிப்பா எனக்கு அவ வேணும்டா.. அவ கிடைக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன் டா…. வெறி கொண்டவன் போல் கத்தினான் ஸ்ரீராம்.

டேய் லூசா டா நீ… இப்படி சொல்லிட்டு இருக்க? என்ன இருந்தாலும் அவ நம்ம தோழிடா… ஒத்துக்குறேன்… நீ அவள லவ் பண்ண… பட் அவ தான் சொல்லிட்டாளே அப்படி ஒரு எண்ணமே அவ மனசுல இல்லனு… என்றான் கௌஷிக்.

நேத்து கூட அவள பார்த்தேன் டா… யாரோ சிவாவாம் கல்யாணம் பண்ண போறாளாம்… அவ ப்ரண்ட்ஸ் டா சொல்லிட்டு இருந்தா… இந்த கல்யாணம் நடக்க விட மாட்டேன் டா.. அவ என்ன தவிர யாரையும் கட்ட கூடாது…

இருவரும் பாரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்… ஸ்ரீராம் போதையில் இருந்தான்….

—————

கௌஷிக்கின் மனக்கண்ணில் அந்த நாள் தோன்றியது…

இவர்கள் விஜியின் M.A கல்லூரி தோழர்கள்… கல்லூரியின் கடைசி நாள்… அனைவரும் பிரிய போகிறோம் என்ற துயரில் இருந்தனர்….

ஸ்ரீராம் கௌஷிக்கை இழுத்துக் கொண்டு விஜியிடம் சென்றான்…

விஜி…

என்ன கௌதம்?

ஸ்ரீராம் எதோ உன்ட சொல்லனுமாம்…

ம்ம் என்ன? சொல்லு ஸ்ரீராம்…

விஜி நான் டேரக்ட்டா சொல்றேன்… I m in love with u… wat abt u??…

சாரி ஸ்ரீராம்… நான் அந்த அர்த்தத்துள்ள உன்ட பழகல… if i m hurting u. I m sorry for that.. நான் மேரேஜ் பண்றவங்க கண்டிப்பா அப்பா அம்மா பார்த்த மாப்பளயாதான் இருப்பாங்க… சாரி…

——————–

கௌதமிற்கு அவள் கூறியதில் தப்பாக ஒன்றும் தோன்றவில்லை… மரியாதைதான் தோன்றியது… இந்த காலத்தில் எத்தனை பேர் அப்பா அம்மா பார்த்த பையன் தான் தனக்கு கணவன் என்று கூறுகிறார்கள்….

ஸ்ரீராம் சென்று அவள் அப்பாவிடம் பெண் கேட்கவும் முடியாது…. இவன் கேட்டாலும் அவர் பெண் தர மாட்டார்… பின்ன வேளை இல்லாமல்…. தினமும் குடித்து தன் தந்தையின் சொத்தை அழிக்கும் இவனுக்கு யார் பெண் குடுப்பார்கள்… என்ன தான் அவன் அப்பா பணக்காரராக இருந்தாலும்.. இவன் செலவு செய்வதில் எல்லாம் சில காலம் தான்… யோசித்துக்கொண்டே தன் நண்பனை திரும்பி பார்த்தான்… அவன் மட்டையாகி கிடந்தான்…

ஆனால் இவன் ஒன்றை நினைத்தால் அடையாமல் விட மாட்டானே என்றும் அவனுக்கு கவலையாக இருந்தது… என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்…

—————————

லஷ்மி சிவா எங்க?

ரூம்லதான் இருந்தான்.. கூப்டவாங்க?

ம்ம் ரூம்க்கு வர சொல்லுமா… கொஞ்சம் பேசனும்.. நீயும் வா… என்று தன் ரூம்மை நோக்கி சென்றார் சுந்தரம்.

சிவாவை அழைத்துக்கொண்டு
ஐந்தே நிமிடத்தில் தன் அறையில் நுழைந்தாள் லஷ்மி.

என்ன அப்பா… என்ன விஷயம்??

சிவா.. உன்ட ஒரு பொண்ணோட போட்டோ குடுத்து ஒரு வாரம் ஆச்சு… என்ன முடிவு பண்ணிருக்க?

சிவாவின் முகம் மலர்ந்தது… உங்களுக்கு ஓகேனா எனக்கு ஓகேதான் அப்பா… என்றான்…

லஷ்மி நீ என்ன சொல்ற?

நல்ல பொண்ணாதான் இருக்கா…. நம்ம குடும்பத்துக்கு ஒத்து வந்தா எனக்கு ஓகே தான்ங்க.. வேற என்ன நமக்கு வேணும்…

எனக்கும் ஒத்துவரும்னுதான் தோனுது…. சரி அப்ப நான் நாளைக்கு பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லிரேன்….. என்று தன் மகனின் முகத்தை பார்த்துக்கொண்டே கூறினார்…

மகனின் முகம் பிரகாசம் ஆனதைப் பார்த்த அவரின் முகம் நிம்மதி அடைந்தது… தன் மகனின் மகிழ்ச்சியைவிட ஒரு தந்தைக்கு வேறு என்ன வேண்டும்….

சரிங்க சொல்லிடுங்க… என்று எழுந்து சமையலறையை நோக்கி சென்றார்..

கண்ணில் கனவுகளுடன் தன் அறையை நோக்கி சென்றான் சிவா…

சிவாவின் காதல் ஜெய்க்குமா? இல்லை ஸ்ரீராமின் வெறி ஜெய்க்குமா?
பொருத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *