*4*

 

காலை 6 மணி…. தன் வழக்கமான ஜாக்கிங்கை முடித்துவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தான் சிவரஞ்சன் (சிவா).. அவன் தோட்டத்தை கடந்து வீட்டில் நுழைவதற்குள் அவனைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் சில வார்த்தைகள்…

சிவரஞ்சன், KMS GROUP OF COMPANIES ன் இரண்டாவது வாரிசு…

K. மீனாட்சி சுந்தரம்(சுந்தரம்), M. விஐயலட்சுமி(லஷ்மி) தம்பதியருக்கு மொத்தம் ஐந்து செல்வங்கள்…. மூத்தவன் சத்யன்… அடுத்தவள் சந்தியா… அடுத்து சிவரஞ்சன்… அடுத்து இரட்டைப் குழந்தைகள் சுசித்ரன், சுமித்ரா…

மீனாட்சி சுந்நரம் கடும் உழைப்பாளி…. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து.. சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து தன் உழைப்பால் முன்னேறியவர்…இன்று KMS சாம்ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்கு இவரே காரணம்… இவருக்கு பக்கபலமாக இருப்பவர் விஜயலட்சுமி…. இருவரும் சிறந்த தம்பதிகள்….ஒரு கணவன் மனைவி இப்படிதான் இருக்க வேண்டும் என்று அனைவரையும் உணரவைக்கும் ஒற்றுமை…..

சத்யன் அன்பானவன்… அவன் அன்பிற்கு அடைக்கலமான மனைவி நிலா… இரு குழந்தைகள் ஐந்து வயதான மகன் நித்யன் , ஆறு மாத மகள் சாலா…

சந்தியா திருமணம் முடிந்து மதுரையில் வசிக்கிறாள்… கணவன் முத்துராஜ்… இரண்டு வயது மகள் ராதா….

சுசித்ரன், சுமித்ரா மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள்….. அனைவருக்கும் செல்லம் வீட்டில்…. அவர்கள் இருக்கும் இடத்தை சிரிப்பால் அதிர வைக்கும் ரகம்…

சிவரஞ்சன்… தந்தையை பின்பற்றுபவன்…. அண்ணனுடன் சேர்ந்து குடும்ப தொழிலை சிறப்பாக நடத்திக்கொண்டே ஒரு பள்ளியும் ஆரம்பித்து அதை சிறப்பாக நடத்துகிறான்… அதோடு சேர்ந்து தாய் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு ஒரு காப்பகமும் சிறப்பாக நடத்திவருகிறான்….

வீட்டின் உள்ளே நுழைகிறான் சிவா…. ஹாலில் அமர்ந்து இன்றைய தினசரியை எடுக்கும் போதே அண்ணி நிலா காபியை நீட்டுகிறாள்… புன்னகையுடன் காபியை வாங்கிக்கொண்டு பேப்பரை புரட்டுகிறான்…7 மணிவரை பேப்பர் படிப்பது அவன் வழக்கம்… அவன் முடிக்கவும் அவன் தந்தையும் அண்ணனும் யோகா முடித்து அங்கு வரவும் சரியாக இருந்தது… மூவரும் கம்பேனியை பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்….

“இந்த சுசியும் சுமியும் இன்னுமா தூங்குறாங்க லஷ்மி?” என்றார் சுந்தரம் தன் அறையை நோக்கி சென்று கொண்டே..

“இருங்க நான் பார்த்துட்டு வரேன்….” என்கிறார் லஷ்மி..

“இருங்க அத்தை நான் பார்க்குறேன்!” என்று செல்கிறாள் நிலா…

சிறு வேலை கூட தன் அன்னையை செய்யவிடாமல் தானே அனைத்தையும் செய்யும் மனைவியை எப்போதும் போல் காதலுடன் நோக்குகிறான் சத்யன்…

நிலா சென்று இருவரையும் எழுப்பி கல்லூரிக்கு கிளம்ப கூறிவிட்டு தன் மகனை எழுப்ப சென்றாள்…

ஹாலில் இருந்த சத்யன் தன் மனைவி தங்கள் அறைக்கு செல்வதை பார்த்து தானும் எழுந்தான்… அதுவரை இவனை கவனித்துக்கொண்டிருந்த சிவா சத்தமாக சிரித்தான்…

சத்யனும் சிரித்துக்கொண்டே, “உனக்கும் மனைவி வருவா.. அப்ப நீ எப்படி இருக்கனு பார்க்குறேன்!” என்று கூறியபடி தன் அறை நோக்கி விரைந்தான்….

சிவாவின் மனதில் விஜயதர்ஷினியின் முகம் தோன்றியது… அவன் தன் அறைக்கு சென்று தன் போட்டோவிற்கு பின்னே ஒளித்து வைத்திருந்த விஜியின் போட்டோவை கையில் எடுத்து தன் நெஞ்சோடு வைத்து அழுத்தினான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *