*16*

 

மாணிக்கத்தின் குடும்பத்தொழில் டப்லிங் யூனிட் ஆகும்…

அதை சத்யனும் சிவாவும் சேர்ந்து விரிவு படுத்துகிறார்கள்…

இன்று புது மிஷின் வந்து இறங்குகிறது…

காலையில் ஆறு மணிக்கே இருவரும் கம்பேனிக்கு கிளம்பினர்… சுந்தரம் மற்ற கம்பேனியை பார்ப்பதாக ஏற்பாடு…

ஏழு மணியளவில் லாரியில் மிஷின் வந்தது… லாரியை பார்த்ததும் அங்கு வந்த லோடுமேன் தாங்கள் தான் மிஷினை இறக்குவோம் என்று கூறினர்…

“ஹே எங்க கம்பேனிக்குனு லோடு ஏத்தவும் இறக்கவும் தனியாக லோடுமேன் இருக்காங்க…” என்றான் சத்யன்…

“அதெல்லாம் கிடையாது சார்… இந்த ஏரியாவுக்கு நாங்க தான் லோடுமேன்… நாங்க சங்கத்து ஆளுங்க…”என்று சண்டை போட்டனர்…

அதற்குள் அவர்கள் அமர்த்திய லோடுமேன்களும் வந்துவிட இருவருக்குள்ளும் சண்டை ஆனது…

நீங்களே பேசி யார் ஏத்துறதுனு முடிவு பண்ணுங்க…. என்று கூறி சத்யனும் சிவாவும் உள்ளே சென்றனர்…. சிறது நேரத்தில் இரண்டு தலைவர்களும் உள்ளே வந்து சங்கத்து ஆட்களே இறக்கட்டும்… நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறி அவர்கள் அழைத்து ஆட்கள் கிளம்பிவிட்டனர்…

சங்கத்து லோடுமேன்கள் மிஷினை இறக்கினார்கள்… கடைசி மிஷினை இறக்கும்போது இறக்க தெரியாமல் இறக்கியதால் தவறுதலாக கீழே விழுந்து லோடுமேன் ஒருவரின் இடது கை விரல் அடிபட்டது… இதை யாரும் எதிர்பார்க்கவில்லை… உடனே அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்….

மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து மிஷினை தூக்கி வைத்தனர்…

சிறிது நேரத்தில் வேலை முடிந்து லோடுமேனுக்கு ரூபாய் குடுக்கும் நேரத்தில்… அடிபட்ட நபர் தன் தந்தை எனறு கூறிக்கொண்டு ஒரு நபருடன் வந்தான்…

சிவாவும் சத்யனும் நின்று பேசிக்கொண்டிருக்க… “இந்த மில்லோட ஓனர் யாரு?” என்றான் திமிராக…

சத்யன் “நாங்கதான்” என்றான்…

“நான் அவனோட அப்பா…” என்றான் சத்யனை முறைத்துக்கொண்டே…

சிவா அவனிடம் “எவனோட அப்பா??” என்றான்…

“அதான் உங்க மில்லுல அடிபட்றுக்கே அவனோட அப்பா…”

“அதுக்கென்ன??” என்றான் சத்யன்…

“உங்க மில்லுல அடிபட்றுக்கு நஷ்டஈடு தாங்க சார்…” என்றான் அவன் திமிராக..

“ஹலோ… நாங்க ஏன் சார் குடுக்கனும்… சங்கம் சங்கம்னு சொல்லி மிஷின தூக்கி கீழ போட்டு உடைச்சதும் இல்லாம லேசான கைக்கீறலுக்கு நஷ்டஈடு கேட்டு வந்துருக்கேங்க…”என்றான் சத்யன்..

“யோவ் என்ன ரூல்ஸ் பேசுறயோ?” என்றான் வந்தவன் எகத்தாளமாக…

அதுவரை அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சிவாவிற்கு அதற்குமேல் கோவத்தை கட்டுபடுத்த முடியவில்லை…

“பேசிட்டு இருக்கும் போதே என்ன ஏகவசனம்… நாங்கதான் முதல்லயே சொன்னோம்ல உங்களால தூக்க முடியாதுனு… அப்பயே போய்ருக்க வேண்டிதன… தேவையில்லாம பிரச்சனை பண்ணாதேங்க..” என்றான் கோவமாக….

“இப்ப நீ 20000 எனக்கு குடுக்கலேனா நீ தொழில் நடத்திக்க மாட்ட.. நான் நடத்த விட மாட்டேன் டா…”

“போடா போ எங்க வேண்ணாலும் போ… நீயா நானானு பார்த்துருவோம்…” என்றான் சிவா…

சத்யன் சிவாவை அமைதிப்படுத்தியும் அவனால் தன் கோவத்தை கட்டுபடுத்த முடியவில்லை… யார் இடத்தில் வந்து யாரை மிரட்டுகிறான் என்று சிவா ஆத்திரமடைந்தான்…

உடனே தன் போலிஸ் நண்பன் விஷ்வாவை போனில் அழைத்தான்… அவன் வந்து அவர்களை கைது செய்தான்… போகும் போது அந்த ஆள் சிவாவை பார்த்து.. “உன்ன சும்மா விட மாட்டேன் டா… இந்த மாரி யார் என்று விரைவில் உனக்கு தெரியும்…” என்று மிரட்டிவிட்டு சென்றான்…

பின் சிவாவும் சத்யனும் வீட்டிற்கு சென்றனர்… அனைவரும் ஹாலில் அமர்ந்து காலையில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்… அப்போது வாசில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு நிலா சென்று கதவை திறந்தாள்.. அங்கு விஷ்வா நின்றிருந்தான்…

விஷ்வா நிலாவின் தம்பி.. சிவாவின் நண்பன்… போலிஸ் ACP..

“ஹாய் அக்கா… எப்படி இருக்க?” என்றான்…

“நல்லா இருக்கேன் டா.. நீ எப்படி இருக்க?”

“ம்ம் சூப்பர்க்கா…”

“வா டா விஷ்வா.. வா வா.. எப்படி இருக்க” என்று வரவேற்றார் சுந்தரம்…

“நல்லா இருக்கேன் மாமா.. நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்க?..”

“ம்ம் நல்லா இருக்கோம்..” என்று அவனை தன் அருகில் அமர்த்திக்கொண்டார் லஷ்மி…

நிலா விஷ்வாவிற்கு தாய் தந்தை சிறு வயதிலேயே காலமானார்கள்… விஷ்வா சிவாவிற்கு சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழனாதலால் அவர்கள் வீட்டில் அவனும் ஒரு மகனே..அதனால் நிலாவிற்கு திருமணம் முடிந்ததும் அவனையும் இங்கு வந்துவிடும்படி அனைவரும் கூறினர்… ஆனால் அவன் தான் மறுத்துவிட்டான்…

“என்ன டா ஆச்சு…. அந்த விஷயம்…” என்றான் சிவா..

“ம்ம் அத சொல்ல தான் வந்தேன்…அவன் பெயர் மாரி.. பக்கா கிரிமினல்…பண்ணாத தில்லுமுல்லு இல்ல… அவன் முதல்ல அடிபட்டவனுக்கு அப்பனே இல்லடா… ஏற்கனவே ஒரு கொலை பண்ணிட்டு பெயில்ல தான் வெளில வந்து சுத்திட்டு இருந்தான்.. இப்ப மறுபடியும் உள்ள தள்ளிட்டோம்… இன்னைக்கி சனி.. நாளைக்கு ஞாயிறு… திங்கள் தான் வெளில வருவான்… பார்த்துக்கலாம்…” என்றான்..

நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *