*15*

 

நாட்கள் வேகமாக ஓடின….

“தர்ஷு தர்ஷு” என்று அழைத்தபடியே உள்ளே வந்தான் சிவா…

“என்ன ரஞ்சன்?”

“எல்லாம் பேக் பண்ணிடேல?”

ம்ம் ஆச்சு ஆச்சு… இன்னும் கிளம்புறதுதான் பாக்கி…

“சரி வா இப்ப கிளம்பினாதான் சரியான நேரத்துக்கு பிளைட்ட பிடிக்க முடியும்…. வா வா..”

குடும்பமே வழி அனுப்ப இருவரும் தங்கள் தேனிலவிற்கு மொரிஷியஸ் செல்கிறார்கள்…

“ஏன் தர்ஷு… நீ பிளைட்ல போய்ருக்கயா?”

“ம்ம் நான் 6th standard படிக்கும் போது டூர் போனோம் பெங்களூர்க்கு.” என்றாள்…

“ஓ அப்ப இப்ப உனக்கு பயமா இருக்காது… சோ சேட்”

“எதுக்கு இப்ப சோகம் உங்களுக்கு…”

“இல்ல நீ பயமா இருக்குனு சொல்லுவ… நம்ம அணைச்சு தைரியம் சொல்லலாம்னு நினைச்சேன்.. ஹும் நீ குடுத்து வச்சது அவ்ளோதான் சிவா… என்ன பண்ண முடியும்…” என்று ஒற்றைக் கண்ணால் அவளை பார்த்துக்கொண்டே சோகம் போல் நடித்தான்…

அவள் கலகலவென நகைத்தாள் அவனைப் பார்த்து…

“என்ன பார்த்தா உனக்கு காமடியா இருக்கா.?” என்று பொய்யாக முறைத்தான்….

“அவள் அவனை நெருங்கி அமர்ந்து… அவன் தோளில் தலை சாய்த்து அவனை அன்னாந்து பார்த்து.. இப்ப ஓகேவா?” என்றாள்…

“ம்ம் இது ஓகே” என்று கூறி கண்ணடித்தான்…

இவர்களுடன் நாமும் பயணிப்போம்…

விஜியும் சிவாவும் ப்ளைட்டில் இருந்து இறங்கி வெளியே வந்தனர்…

சிவா ஹனுமூன் படகுவீட்டை புக் பண்ணியிருந்தான்… அதனால் அவர்கள் திரும்பி செல்லும் வரை அனைத்தும் அவர்கள் ஏற்பாடு…

ஏர்போட்டில் இருந்த வெளியே வந்த இருவரும் ஒரு டாக்ஸியை அமர்த்தி ஏரிக்கு சென்று அவர்களுக்கென காத்திருந்த படகுவீட்டில் ஏறினர்…

சுற்றியும் தண்ணீர்… நடுவில் கப்பல்… அனைத்தையும் இருவரும் ரசித்தனர்…பின் இருவரும் ரெஸ்டு எடுக்க உள்ளே சென்றனர்…

“ரஞ்சன்… எனக்கு ரொம்ப குளுருது…”

“நான் இருக்கும் போது உனக்கு குளுர கூடாதே” என்று கூறிக்கொண்டே அவளை நெருங்கினான்…

“ரஞ்சன்…ப்ளீஸ் வராதேங்க… இப்பதான் வந்தோம்…” என்று கூறிக்கொண்டே பின்னே நகர்ந்தாள்..

“ஹே இங்க என்ன பஜனை பண்ணவா வந்தோம்…”

அவன் அவ்வாறு கூறியதும் அவள் முகம் செங்கொழுந்தாக மாறியது… ஆனால் அவள் பின் செல்லுவதை நிறுத்தவில்லை…

அவனும் முன்னேறுவதை நிறுத்தவில்லை…

பின் இருந்த சுவர் இருவரின் நடையையும் நிறுத்தியது…

அவன் அவளின் இருபக்கமும் தன் கைகளை ஊன்றி அவளை சிறை செய்தான்… மெல்ல இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி அவள் நெற்றியில் முத்தமிட்டான்…

மெல்ல அவனின் இதழ்கள் அவள் முகம் முமுவதும் ஊர்ந்து இறுதியில் தன் இணையோடு சேர்ந்தபோது அவள் கைகள் அவன் கழுத்தை வளைத்திருந்தது… இருவரும் தங்கள் உலகிற்கு சென்றனர்…

அவர்கள் அங்கு இருந்த 15 நாட்களும் நன்றாக பொழுதை கழித்தனர்… இருவரும் திரும்பி வீடு வந்த போது இருவருக்குள்ளும் நன்றாக புரிதல் ஏற்பட்டிருந்தது….

ஆனால் இப்படியே உங்களை விட்டுவிடுவேனா என்று விதி அவர்களை பார்த்து சிரித்ததை பாவம் அவர்கள் அறியவில்லை… அப்படி என்ன நடந்தது???
பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *