*14*

 

சிவாவின் வீடே பரபரப்பாக இருந்தது… பிறகு ஒருவருடம் முன்பு அமேரிக்கா சென்ற மகள் சந்தியா தம்பியின் திருமணத்திற்கு கூட வர முடியாமல் இப்போதுதான் தன் குடும்பத்துடன் தாய்நாடு திரும்புகிறாள் என்றால் அதற்கு ஈடேது…

அனைவரும் மதுரை விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர்…

விமானம் வந்து இறங்கியதும் அனைவரும் ஆவலுடன் பயணிகள் வருவதை பார்த்தபடி நின்றனர்… சிறிது நேரம் அவர்களை காக்க வைத்த சந்தியா தன் கணவன் மகளுடன் வந்தாள்…

“ஹாய்ம்மா..ஹாய்ப்பா….. எப்படி இருக்கேங்க?”

“நாங்க நல்லா இருக்கோம் டா… நீ எப்படி இருக்க?” என்று கேட்டபடி குழந்தையை வாங்கிக்கொண்டார் லஷ்மி…

“ஹேய் சத்தி.. அண்ணி… என் மருமக என்ன சொல்றா..” என்றபடி சாலாவை வாங்கி கொஞ்சினாள்… “இவ பிறந்ததுல இருந்து பார்க்கவே இல்லை.. இப்பயாவது உன் மாமாக்கு வேலை முடிஞ்சதே….” குழந்தை தன் அத்தை கூறுவதை கேட்டு பொக்கு வாயை கொண்டு சிரித்தது…

“ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன்பிறப்பே” என்று பாடியபடி சுமியும் சுசியும் அவள் அருகில் வந்தனர்…

“சுமி…சுசி எப்படி இருக்கேங்க?” என்றபடி அவர்கள் இருவரையும் கட்டிக்கொண்டாள்.

“ஹேய் புதுமாப்ள” என்றபடி சிவாவை அணைத்தாள்…

விஜி என்று அழைத்தபடியே அவள் கைகளை பிடித்துக்கொண்டாள்…

நலவிசாரிப்பெல்லாம் முடிந்ததும்… “சரி சரி வாங்க கிளம்பலாம்” என்றபடி அனைவரும் வாசலுக்கு திரும்பினர்…

அப்போதுதான் சந்தியா தன் கணவன் அங்கு இல்லாததை கவனித்தாள்…. “இவர் எங்க? யாராவது பார்த்தேங்களா?”

அனைவரும் அவரை தேடினார்கள்… சுசி திரும்பி பார்த்து விட்டு உரக்க சிரித்தான்… அவன் பார்த்த திசையில் அனைவரும் பார்த்துவிட்டு நகைத்தனர்….

அங்கு முத்துராஐ் இருக்கையில் அமர்ந்தபடி தூங்கிக்கொண்டிருதான்…

சிவா சந்தியாவிடம் திரும்பி… நீ இவ்வளவு நேரம் போட்ட மொக்கைக்கு பாவம் மச்சான் இங்கயே தூங்கிட்டார்… போ போய் எழுப்பி கூட்டிட்டு வா…” என்று கூறி அனைவரையும் காருக்கு அழைத்து சென்றான்…

சந்தியா தன் கணவன் அருகில் சென்று முதுகில் ஒரு அடிவைத்து எழுப்பினாள்… அவன் பதறி எழுந்து சுற்றும் முற்றும் பார்த்து… சந்தியாவை பார்த்து அசடு வழிந்தான்… சந்தியா அவனை முறைத்துவிட்டு சென்றாள்.. அவன் அவளை பின் தொடர்ந்தான்…

சந்தியாவிற்கு மாமனார் மாமியார் தவறிவிட்டனர்… முத்துராஜ் அவர்களுக்கு ஒரே மகன்.. அதனால் இப்போது யாரும் இல்லாததால் சந்தியாவின் குடும்பம் மட்டுமே விமான நிலையம் வந்திருந்தனர்..

லட்சுமி முதல் நாளே ஆள் வைத்து சந்தியாவின் வீட்டை தூசி தட்டியிருந்தார்.

அனைவரும் சந்தியாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வரும் போதே சமைக்க தேவையான பொருட்களை வாங்கி வந்த லட்சுமி சமையலில் இறங்கி விட்டார்… லட்சுமி நிலா வினி சந்தியா நால்வரும் சமைக்க மற்றவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

“மச்சான், அடுத்து மதுரை தனா? இல்ல திரும்ப போற எண்ணம் இருக்கா?”

“இல்ல சிவா, இரண்டுமே இல்ல.. உங்க எல்லாருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கு… எனக்கு உங்க ஊருக்கு மாறுதல் கிடைச்சிருக்கு.. புரொமோஷனோட” என்றதும் அனைவருமே மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்… இதை கேட்டதும் லட்சுமி பாயசமும் சேர்த்து செய்தார்…

அனைவரும் பேசிக் கொண்டே மதிய உணவை முடித்தனர்… பின்பு முத்துராஜ் சந்தியா இருவரிடமும் விடை பெற்று அவர்கள் இல்லம் நோக்கி பயணப்பட்டினர்…

அடுத்த சில நாட்களில் சந்தியா மதுரை வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு இராஜபாளையம் வந்து சேர்ந்தால்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *