*13*

 

மாலை நான்கு மணிக்கு பவித்ராவும் கௌஷிக்கும் விஜியின் வீட்டிற்கு வந்தனர்…

ஹாலில் அமர்ந்திருந்த ஹரிணி அவர்களை வரவேற்று அமரவைத்து… ரூமில் இருந்த விஜியை அழைத்தாள்…

சிவா அப்போது தான் தூங்கி எழுந்தான் என்பதால் விஜியை போக சொல்லிவிட்டு தான் முகம் கழுவ சென்றான்…

“ஹாய் பவி… ஹாய் கௌஷிக்… எப்படி இருக்கேங்க?”

“நாங்க நல்லா இருக்கோம் நீ எப்படி இருக்க?”

“ம்ம் சூப்பர்…”

“அண்ணா எங்க டி?”

“இதோ இப்போ வந்துடுவாங்க…”

“விஜி… ஐ அம் சாரி….நான் அப்படி செய்திருக்க கூடாது… நல்லவேளை நீ வரல… அண்ணா தான் வந்தாங்க…. ரொம்ப சாரி விஜி….” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே.. விஜியின் குழப்பமான முகத்தை பார்த்து பேச்சை நிறுத்தினான்…

“என்ன கௌஷிக்? என்ன சொல்ற? எனக்கு எதுவும் புரியல.”

அப்போது மாடியில் இருந்து இறங்கி வந்த சிவா.. கௌஷிக்கை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்த கௌஷிக்கிற்கு தெரிந்தது, நடந்தது எதுவும் விஜிக்கு தெரியாது என்பதை புரிந்து கொண்டான்..

சிவா எதுவும் சொல்லாதே என்பதை போல் சைகை காண்பித்தான்…. அதை விஜி பார்த்துவிட்டு நெற்றியில் முடிச்சுடன் அமர்ந்திருந்தாள்…

அதன்பிறகு.. கௌஷிக் அதை பற்றி பேசவே இல்லை… விஜி கேட்டதற்கும்… சிவாவும் கௌஷிக்கும் சேர்ந்து பேச்சை மாற்றிவிட்டார்கள்…

பவித்ராவும் கெளஷிக்கும் மாலை டீ ஸ்னாக்ஸ் முடித்துவிட்டு சென்றனர்… அவர்கள் சென்ற மறுநிமிடம்… சிவாவை முறைத்துவிட்டு விஜி படி ஏறினாள்…

அவளை பார்த்த சிவா தலையில் கைவைத்தபடி அவளை பின் தொடர்ந்தான்…

அறைக்குள் சென்ற விஜி பால்கனிக்கு சென்று தன் ஊஞ்சலில் அமர்ந்தாள்…

சிவா அவளின் அருகில் வந்தவுடன் அவள் முகத்தை திருப்பினாள்…

குழந்தை போல் முகத்தை திருப்பிய தன் மனைவியை காதலுடன் பார்த்து… அவள் காலடியில் அமர்ந்து…அவளின் தொடையில் அவன் கையை கட்டி அதில் தன் முகத்தை வைத்து அவளை நிமிர்ந்து பார்த்தான்….

“என் செல்லத்திற்கு என் மேல் என்ன கோபம்??”

“கௌஷிக்கை எப்படி உங்களுக்கு தெரியும்?..” என்றாள் கோபமாக…

“சொல்றேன் சொல்றேன்… முதல்ல இதுக்கு பதில் சொல்லு?”

“என்ன?”

“ஸ்ரீராம்னு யாராவது உனக்கு நண்பன் இருக்காங்களா?”

“ம்ம் இருக்கான்… அவன் எங்க இங்க வந்தான்… உங்களுக்கு எப்படி அவன தெரியும்… அவன்ட நானே இப்ப டச்ல இல்லயே…” என்றாள் யோசித்தபடி…

“ம்ம் சொல்றேன்…” என்று கூறி நடந்த அனைத்தையும் கூறினான் சிவா…

அவன் கூறி முடிக்கையில் அவள் கண்களில் இருந்து இப்போது விழுந்திடுவேன் என்று கண்ணீர் முட்டிக்கொண்டிருந்தது…

“கண்ணம்மா அழாதடா… இதுக்குதான் நான் உன்கிட்ட சொல்லவேண்டாம்னு மறைச்சேன்…”

அவ்வளவு நேரம் கட்டுபடுத்திய கண்ணீர் இப்போது கன்னத்தில் வழிந்தது… அவள் விம்மி வெடித்து அழுதாள்…

அவன் எழுந்து அவளை இழுத்து தன் வயிற்றில் சாய்த்து அவளின் முதுகை வருடி அவள் அழுகையை கட்டு படுத்தினான்…

சிறிது நேரம் அழுதவள் திடீரென்று எழுந்து அவனின் முகத்தை தன் கைகளில் ஏந்தி முகம் முமுவதும் தன் முத்திரையை பதித்தாள்….

“ஐ லவ் யு ரஞ்சன்… ஐ லவ் யு…. ஐ அம் சோ லக்கி டு ஹவ் யு…” என்று கூறியபடியே அவனை இறுக்க கட்டிக்கொண்டாள்….

அவனும் அவளுக்கு சலிக்காதவனாக… திருப்பிக்கொடுத்தான்….

“இரண்டு நாள் போனதே தெரியல…. என்ன ஹரிணி… அதுக்குள்ள இருவரும் கிளம்புறாங்க…” என்று வருத்தமாக தன் மருமகளிடம் பேசியபடி சமையலில் ஈடுபட்டிருந்தார் நிர்மலா…

“ம்ம் ஆமா அத்தை…”

சிவாவும் விஜியும் இன்று அவர்கள் வீட்டுக்கு செல்கிறார்கள்….

காலை உணவை முடித்தும் இருவரும் கிளம்பினர்…

அங்கு சென்றதும்.. சிவா தன் கம்பேனிக்கு கிளம்பி சென்றான்…

வீட்டில் லஷ்மி… நிலா… விஜி மூவர் மட்டுமே… இருந்தனர்…

மூவரும் அரட்டை அடித்தபடி மதிய சமையல் செய்தனர்…

விஜி அவர்களிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *