*10*

 

அதிகாலையிலேயே விஜிக்கு விழிப்பு தட்டியது… ஆனால் எழ முடியாமல் சிவாவின் கரம் அவளை வளைத்திருந்தது…. திரும்பி அவனை பார்த்தாள்… சிவா ஆழ்ந்த நித்திரையில் குழந்தை போல் உறங்கிக்கொண்டிருந்தான்… முன்தினம் நடந்தவற்றை நினைத்தாள்… வெட்கம் சூழ்ந்தது….
எழுவதற்காக அவன் கையை விலக்கினாள்… அவனிடம் அசைவு தென்பட்டது…. இன்னும் அவளை இறுக்கினான்…

“விடுங்க ரஞ்சன்… எல்லாரும் நமக்கு வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க… போகனும்…”

“சரி வா… ஏற்கனவே லேட் ஆச்சு சேர்ந்து குளிச்சு கிளம்பலாம்…”

“ஆசைய பாரு… விடுங்க நான் சீக்கிரம் போறேன்… நீங்க மெதுவா வாங்க….”

“அதெல்லாம் முடியாது… நீ நான் சொல்றத கேளு…” என்று அடம்பிடித்தான்…

“சரி சரி வாங்க…” என்று எழுந்தாள்…

அவன் எழுவதற்குள் பாத்ரூமிற்குள் சென்று கதவை தாளிட்டாள்…

அவன் அவளை முறைத்துவிட்டு திரும்ப படுத்துவிட்டான்…

அவள் குளித்து கிளம்பி கீழே வரும்வரை அவன் எழவில்லை…

விஜி கீழே வருவதைப் பார்த்து ஹாலில் அமர்ந்திருந்த சுந்தரம்..மாணிக்கம்..விஜய்..சத்யன்.. அனைவரும் குட் மார்னிங் மா என்றனர்…

அனைவருக்கும் குட் மார்னிங் கூறிவிட்டு… கிட்சனிற்குள் சென்றாள்.. அங்கு லஷ்மி… நிர்மலா… நிலா… ஹரிணி… அனைவருக்கும் காபி கலந்து கொண்டிருந்தார்கள்…

லஷ்மி இவளை பார்த்ததும் தன் அருகில் நிறுத்திக்கொண்டார்…

நிர்மலா மகளை பார்த்த பார்வையில்… வெட்கத்துடன் மகள் தலைக்குனிந்தாள்… இதை கண்ட நிர்மலாவின் முகத்தில் அமைதி தோன்றியது… தாய்க்கு தெரியாத சூலா?? மகளின் வாழ்வு தொடங்கிவிட்ட மகிழ்ச்சியுடன் அந்த தாய் நிம்மதியானாள்…

“அத்தை சுமி.. சுசி எங்க?” என்றாள் விஜி..

“அவங்க இரண்டு பேரும் ஏழு மணிக்கு தான் எந்திரிப்பாங்க… சோம்பேறிங்க…” என்றார் லஷ்மி..

“நீ உனக்கும் சிவாக்கும் காபி எடுத்துக்கொண்டு ரூம்க்கு போமா… 9 மணிக்கு சாப்பிட வந்தா போதும்… போய் ரெஸ்ட்டு எடுமா…” என்று அவளை காபியோடு அனுப்பி வைத்தார்…

தன் ரூம்க்கு காபியோடு வந்த விஜி… இன்னும் சிவா எழாமல் இருக்க… காபியை ஷெல்பில் வைத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்து அவனை எழுப்பினாள்…

இதற்காகவே காத்திருந்தவன் போல அவள் கையை பிடித்து இழுத்து தன் மேல் சரித்தான்…

“ஐயோ ரஞ்சன்… என்ன பண்றேங்க? விடுங்க ப்ளீஸ்… நான் குளித்துவிட்டேன்…”

“நான் சொன்னத நீ கேட்டயா? நீ சொல்றத நான் ஏன் கேட்கனும்…”

“ப்ளீஸ் ரஞ்சன்…”

“நீ என்ன ஏமாத்துனதுக்கு வட்டியோட சேர்த்து வசூல் பண்ணிட்டுதான் விடுவேன் பாரு…” என்று அவள் இதழ் நோக்கி குனிந்தான்…

“ப்ளீஸ் ரஞ்சன்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவன் அவளை ஆக்கிரமித்திருந்தான்…

அவளும் அவனுள் கரைந்தாள்…

அவர்கள் இருவரும் ஒன்றாக கிளம்பி கீழே வர மணி 9 ஆனது…

காலையில் வேறு சேலையில் இருந்தவள் இப்போது வேறு சேலையில் கீழே வருவதைப் பார்த்த அனைவரும் கண்டும் காணாதது போல் இருந்தனர்…

அனைவரும் உணவருந்தி முடிக்கவும்… விஜியின் அப்பா அம்மா அண்ணா அண்ணி தன் வீட்டிற்கு கிளம்பினர்… இரண்டு நாளில் மறுவீடு வர வேண்டும் என்ற அழைப்புடன்… விஜி எவ்வளவோ முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை… அவளை சிவா தன் தோலில் சாய்த்து அமைதி படுத்தினான்… இதைக் கண்ட மாணிக்கமும் நிர்மலாவும் நிம்மதியாக புறப்பட்டனர்…விஜய் தன் தங்கையை அணைத்து தலையை தடவிவிட்டு சென்றான்…

பிறந்த வீட்டினர் சென்றதும் சோர்ந்து அமர்ந்த விஜியை பார்த்த சுந்தரம் தன் மனைவிக்கு கண்ஜாடை காட்டினார்.. அதை உணர்ந்த லஷ்மி சுமி… சுசியிடம் சைகை காட்டினாள்…

சுமியும் சுசியும் விஜிக்கு அருகில் அமர்ந்தனர்…

சுமி ஆரம்பித்தாள்… “அண்ணி நீங்க ஹனிமூன்க்கு எங்க போறதா இருக்கேங்க… உங்களுக்கு பிடிச்ச இடம் என்ன?” என்று அவளை திசை திருப்பினாள்…

அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவளும் கலகலப்பானாள்…

“சுமி எனக்கு மொரிஷியஸ் போனும்னு ஆசை என்றாள்…”

இதைக்கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்…. ஆச்சரியமானார்கள்….

அப்படி என்ன அந்த பதிலில் இருந்தது…..
பொறுத்திருந்து பார்ப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *